»   »  நடிகைக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் மானபங்கம் ஏன்?: விசாரிக்கும் போலீஸ்

நடிகைக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் மானபங்கம் ஏன்?: விசாரிக்கும் போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகைக்கு திருமணம் நடக்க உள்ள நேரத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகை ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

Why actress gets molested at this time?

இந்த சம்பவத்திற்கு மலையாள திரையுலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருமணம்

நடிகைக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணம் நடக்க உள்ள நேரத்தில் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்பட்டது ஏன் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லால்

நடிகையை அந்த கயவர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டதும் அவர் நேராக மூத்த நடிகரான லாலின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார்.

புகார்

நடிகை தனது வருங்கால கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அவரின் அனுமதியுடனேயே போலீசில் புகார் அளித்ததாக லால் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ்

நடிகைக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்து முதலில் கோபப்பட்டு பொங்கியவர் நடிகர் பிரித்விராஜ். நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார்.

English summary
Kerala police are investigating as to why that actress was molested at a time when her marriage is on cards.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil