Don't Miss!
- News
"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கமல் 60.. தல கலந்துக்காததுக்கு இதுதான்பா காரணமாம்.. கேட்டதில் இருந்து சோகத்தில் அஜித் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: கமல் 60 விழாவில் அஜித் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் திரையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை மிக பிரமாண்ட விழாவாக கொண்டாடியுள்ளது தமிழ் திரையுலகம்.
கமல் ஹாசனின் பிறந்தநாளையொட்டி, கமல் 60 'உங்கள் நான்' விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதேபோல் திரையுலகை சேர்ந்த மூத்த நடிகர், நடிகையர் முதல் இளம் நடிகர்கள் வரை பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே!

அஜித், விஜய் மீது விமர்சனம்
ஆனால் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் விழாவிற்கு வராதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அழைப்பிதழ் வழங்கப்பட்டும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகரை கவுரவிக்க விஜய்யும், அஜித்தும் தவறிவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தரப்பு விளக்கம்
தளபதி 64 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் நடிகர் விஜய்யால் கமல் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என அந்த படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமலை வாழ்த்தினார்.

அஜித் ஏன் வரவில்லை
ஆனால் அஜித் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை. கமல் விழாவில் அஜித் கலந்துகொள்ளாதது ஏன் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. அதாவது, அஜித்தின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தான் அவரால் கமல் 60 விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என பேசப்படுகிறது.

உண்மை தானா?
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஏனெனில் அஜித் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே இந்த தகவல் உண்மைதானா என்பதை விரைவில் அவர்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் சோகம்
இது ஒருபுறம் இருக்க, அஜித்தின் தந்தைக்கு உடல்நலமில்லை எனக் கேள்விப்பட்டால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? விரைவில் அவர் குணமடைய வேண்டும் என சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.