»   »  'எனக்கு அமிதாப் வில்லனா? நோ நோ...' மறுத்த ரஜினிகாந்த்!

'எனக்கு அமிதாப் வில்லனா? நோ நோ...' மறுத்த ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனக்கு வில்லனாக நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என ரஜினிகாந்த் கூறியதால் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

எந்திரன் 2

எந்திரன் 2

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். மிகப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகமான 2.0 வை அதை விட பிரமாண்டமாக உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளார். இந்த படத்திலும் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

அர்னால்ட்

அர்னால்ட்

முதலில் இந்த படத்தின் வில்லன் கதாப்பத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸநெகரிடம் பேசப்பட்டது தெரிகிறது. ஆனால் அம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

இப்போது அர்னால்ட் நடிக்கவிருந்த வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். ரூ 350 கோடி பொருட் செலவில் உருவாகும் இந்தப் படம்தான், 110 ஆண்டு இந்திய சினிமாவின் காஸ்ட்லி படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டாரும், நடிகர் ரஜினிகாந்தின் நண்பருமான அமிதாப் பச்சன் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமிதாப் கூறுகையில், "இயக்குநர் ஷங்கர் என்னைச் சந்தித்து, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் என்னை வில்லனாக நடிக்கவைக்க விரும்புவதாக தெரிவித்தார்.

ரஜினி வேண்டுகோள்

ரஜினி வேண்டுகோள்

இதுகுறித்து நான் ரஜினிக்கு தொடர்பு கொண்டு கூறினேன். இதைக் கேட்ட அவர், "மக்கள் உங்களை ஒரு வில்லனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அப்படி செய்யவேண்டாம், என்று கேட்டுக் கொண்டார். நானும் அவர் சொன்னதை சரி என்று ஏற்றுக்கொண்டேன்," என்றார்.

English summary
Amitabh Bachchan has revealed that why he was opted out from Rajinikanth's 2.0.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil