இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது இவர் தான்.. என்ன காரணம்?

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளார்.

சனிக்கிழமையே அனிதா சம்பத் தான் வெளியேறிவிட்டார் என்பது கசிந்து விட்ட நிலையில், ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் அவர் எப்படி வெளியேறினார்.

ஹவுஸ்மேட்களிடம் என்ன பேசினார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் நிகழ்ச்சியை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

அனிதா சம்பத் வெளியேற்றம்

அனிதா சம்பத் வெளியேற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் போட்டியாளராக பங்குபெற்ற அனிதா சம்பத் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். இந்த முறையும், கடைசியில் ஆஜீத்தா, அனிதாவா என்ற கடைசி நேர பதற்றம் சமூக வலைதளங்களில் கசிந்த உண்மையை தெரியாமல் பார்க்கும் ஏகப்பட்ட டிவி ரசிகர்களுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனிதாவின் ஆருடம்

அனிதாவின் ஆருடம்

வார வாரம் யார் வெளியே போகிறார்களோ அவர்கள் திட்டவட்டமாக தாங்கள் தான் வெளியேற போகிறோம் என்பதை கமல் சொல்வதற்கு முன்பாகவே அறிவித்து விடுகின்றனர். இந்த வாரமும் அனிதா சம்பத், சார் நான் தான் சார் என ஜெயம் ரவி ஷிவானியையும், கேபியையும் சேவ் செய்வதற்கு முன்பே சொல்லி விட்டார்.

ஆஜீத்துக்கு வேற கவலை

ஆஜீத்துக்கு வேற கவலை

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவோம் என்கிற கவலை கேபி, ஷிவானி மற்றும் ஆஜீத்தின் முகங்களில் துளி கூட இல்லை. இதன்மூலம் அவர்களுக்கு ஏற்கனவே ரிசல்ட் சொல்லப்பட்டு விடுமா? என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. அனிதாவா? ஆஜீத்தா? என இருக்கும் போது கூட ஆஜீத் தான் ஏன் கடைசியில் சேவ் ஆகிறேன் என்கிற கவலையை மட்டுமே கொண்டிருப்பது செம காமெடி.

என்ன காரணம்

என்ன காரணம்

அனிதா சம்பத் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற என்ன காரணம் என சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர். ஆரியை எதிர்த்து அனிதா சம்பத் நாக்கைத் துருத்தி பேசியது தான் காரணம் என கமல் சொல்லாமல் சொல்லி விட்டார். ஆரி ஆர்மியினர் இந்த முறையும் அனிதாவை வெளியேற்ற ஆஜீத்துக்கும் ஷிவானிக்கும் ஓட்டுப் போட்டு விட்டனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

விஜய் டிவி இல்லை

விஜய் டிவி இல்லை

மேலும், அனிதா சம்பத் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை இல்லை என்றும், அதனால் தான் இந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். இன்னமும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகள் மொத்தமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பட்டா போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். எப்படி இருந்தாலும் அனிதா தனது கணவருடன் இந்த புத்தாண்டை கொண்டாடப் போவது சந்தோஷமான விஷயம் தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X