For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தாலிபன்களுடன் இந்துக்களை ஒப்பிடுவதா? கொதித்தெழுந்த நெட்டிசன்கள் #ArrestSwaraBhasker

  |

  மும்பை: கங்கனா ரனாவத் போலவே நடிகை ஸ்வரா பாஸ்கரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் சிக்கி விடுகிறார்.

  ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், தாலிபன்களின் அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அதே போல இங்குள்ள இந்து தீவிரவாதத்தையும் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

  மூன்றரை வயது குழந்தை ஜெசிக்காவிற்கு இதய நோய்... உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

  இந்துக்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக ஸ்வரா பாஸ்கர் சித்தரித்து வருகிறார் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தை மிஸ் பண்ணிய நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தை மிஸ் பண்ணிய நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

  ஸ்வாராவை கைது செய்

  ஸ்வாராவை கைது செய்

  நடிகர் தனுஷின் இந்தி படமான ராஞ்சனா படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருப்பார் நடிகை ஸ்வரா பாஸ்கர். ஏகப்பட்ட இந்தி படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர் சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது #ArrestSwaraBhasker என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  இந்து தீவிரவாதம்

  இந்து தீவிரவாதம்

  நெட்டிசன்கள் இப்படி கொதித்தெழும் அளவுக்கு அப்படி என்ன ஸ்வரா பாஸ்கர் ட்வீட் செய்திருக்கிறார் என்று பார்ப்போம். இந்துத்துவா தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது. அதே போல தாலிபன் தீவிரவாதத்தை பார்த்து சந்தோஷப்பட முடியாது என ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ஸ்வரா பாஸ்கர்.

  மற்ற நடிகைகள்

  மற்ற நடிகைகள்

  பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை ஏகப்பட்ட பேர் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் ஆக்கிரமித்து இருப்பதற்கு எதிராக கண்டனக் குரல்களை ட்வீட் மூலம் பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும், ஸ்வரா பாஸ்கர் போல தாலிபன் பிரச்சனையுடன் இந்துக்களை தீவிரவாதிகளாக சேர்த்து ஒப்பிடவில்லை. இதன் காரணமாகத்தான் ஸ்வரா பாஸ்கர் மீது பாலிவுட் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இப்படியொரு டிரெண்டிங்கை ஆரம்பித்துள்ளனர்.

  இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல

  இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல

  இந்து பயங்கரவாதம் என்பதே உங்களை போன்றவர்கள் உருவாக்கிய வெறும் கட்டுக் கதை. ஆப்கானிஸ்தானுக்கு போய் இருந்து பாருங்கள். அப்போது தான் இந்தியா கொடுத்திருக்கும் சுதந்திரம் பற்றி அறிந்து கொள்வீர்கள் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் இந்துக்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு விட்டார் ஸ்வரா பாஸ்கர் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இறையாண்மைக்கு எதிராக

  இறையாண்மைக்கு எதிராக

  நடிகை ஸ்வரா பாஸ்கர் நீங்கள் நேரடியாக எங்கள் இந்து மதத்தை கொச்சைப் படுத்தும் விதமாகவே இப்படியொரு ட்வீட்டை போட்டு இருக்கீங்க.. இது இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒரு மதத்துவேசம் இதற்காகவே உங்களை கைது செய்து உள்ளே வைக்கலாம் என நெட்டிசன்கள் ஸ்வராவை கண்டித்து வருகின்றனர்.

  இது அவங்க பிரச்சனை

  இது அவங்க பிரச்சனை

  இது அவங்க நாட்டு பிரச்சனை அது தொடர்பாக நீங்க எந்த கருத்தையும் சொல்லத் தேவையில்லை. எப்படி இந்திய விவசாயிகள் பிரச்சனை குறித்து ரிஹானா ட்வீட் போட்ட போது சச்சின் முதல் சகல பிரபலங்களும் வந்து இது எங்கள் நாட்டு உள் விவகாரம் என சொன்னீங்களோ அதே போலத்தான் என்று சில நெட்டிசன்கள் ஸ்வராவை அடக்கி வாசிக்க சொல்லி வருகின்றனர்.

  வைப்ரேட்டரை மறந்துடாதீங்க

  வைப்ரேட்டரை மறந்துடாதீங்க

  உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நேரா ஆப்கானிஸ்தானுக்கு போங்க.. அந்த போய் நீல நிற பர்தாவை போட்டுக் கொண்டு ஒரு வாரம் மட்டும் அங்குள்ளவர்களுடன் இருந்து பாருங்கள்.. போகும் போது கண்டிப்பாக உங்களுடைய அந்த வைப்ரேட்டரை மறக்காம எடுத்துப் போங்க என மீனா தாஸ் நாராயணன் எனும் பத்திரிகையாளர் நேரடியாகவே ஸ்வாராவுக்கு சவால் விடுத்துள்ளார்.

  மும்பை போலீசுக்கு டேக்

  மும்பை போலீசுக்கு டேக்

  பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரின் அந்த் ட்வீட்டை ஏகப்பட்ட நெட்டிசன்கள் மும்பை போலீஸ் மற்றும் மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு டேக் செய்து அவரை கைது செய்யும்படி புகார்களை குவித்து வருகின்றனர். இந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசு வருகிறார் ஸ்வரா பாஸ்கர் என கண்டனங்கள் கிளம்பி வருகின்றன.

  இதே பொழப்பு

  இதே பொழப்பு

  நான் இந்துஸ்தானை சேர்ந்தவள் ஆனால், அதற்காக வெட்கப்படுகிறேன் என்கிற பதாகையுடன் நடிகை ஸ்வரா பாஸ்கர் இருப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்து இவருக்கு இதே பொழப்பு தான் என நெட்டிசன்கள் ஸ்வராவை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பிரச்சனையை பேசும் போது, சைடு கேப்பில் இந்து தீவிரவாதம் பற்றி பேச்சை எடுத்ததிலேயே இவரது எண்ண ஓட்டம் தெளிவாக புரிகிறது என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

  சகுனி மாமி

  சகுனி மாமி

  ஸ்வரா பாஸ்கர் ஒரு சகுனி மாமி என்றும், இந்த கதாபாத்திரம் தான் உங்களுக்கு இனி கச்சிதமாக பொருந்தும் என்றும் நெட்டிசன்கள் மகாபாராத சீரியலில் வரும் சகுனி புகைப்படத்தை ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

  ஆப்கனிலிருந்து தமிழர்களின் அபய குரல்.. மத்திய அரசு உடனே உதவ உருக்கமான கோரிக்கை
  ட்விட்டர் நடவடிக்கை எடுக்குமா?

  ட்விட்டர் நடவடிக்கை எடுக்குமா?

  நடிகை கங்கனா ரனாவத் கலவரத்தின் போது அதை தூண்டும் விதமாக ட்விட்டர் பாலிசிக்கு எதிராக ட்வீட் போட்டதாக அவருடைய ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. அதே போல ஸ்வரா பாஸ்கர் ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்தி இங்கேயும் ஒரு கலவரத்தை வெடிக்க செய்யப் பார்க்கிறார் அவரது ட்விட்டர் கணக்கையும் ட்விட்டர் நிர்வாகம் முடக்குமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

  ரியல் தீவிரவாதி

  ரியல் தீவிரவாதி

  ஸ்வரா பாஸ்கர் தான் தொடர்ந்து தீவிரமான இந்து எதிர்ப்பு போராட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்து வரும் ரியல் தீவிரவாதி அவரை கைது செய்து உள்ளே போட வேண்டும் என ஸ்வரா பாஸ்கரை தாலிபன் தீவிரவாதி போல சித்தரித்து ஏகப்பட்ட மீம்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  English summary
  Netizens wants to Arrest actress Swara Bhasker for her latest controversy tweet against Hindu Religion. She Compare Taliban terrorism and Hindutva terrorism is same in her tweet stir controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X