»   »  ஆண்கள் டாய்லெட்டுக்கு ஏன் போனார் 'பிக்பாஸ்' காஜல்? - Video Revealed

ஆண்கள் டாய்லெட்டுக்கு ஏன் போனார் 'பிக்பாஸ்' காஜல்? - Video Revealed

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : படங்களிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பாதியில் நுழைந்து பங்குபெற்றதன் மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயமானார். பிக்பாஸில் எலிமினேட் செய்யப்பட்ட இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார்.

Why Biggboss kaajal went to men's toilet -video revealed

அதில் பிரபல திரையரங்கு ஒன்றின் ஆண்கள் டாய்லெட்டுக்குள் நின்றபடி செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்க இருக்கேன் எனக் கண்டுபிடியுங்கள் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியிருந்தார்.

படத்தின் ஷூட்டிங்காக இருக்கும் எனப் பலர் யூகித்த நிலையில் இன்று ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார் காஜல். அந்த வீடியோவில் கையில் துப்பாக்கியுடன் ஒரு கடத்தல் சம்பவத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் காஜல்.

சரண் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'ஆயிரத்தில் இருவர்' படத்தின் கதையைத் தான் சொல்லியிருக்கிறார் காஜல். அந்தப் படத்தில் லேடி டானாக நடித்திருக்கிறாராம் காஜல். 'ஆயிரத்தில் இருவர்' படத்தின் ப்ரொமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ இது என்பது தெரியவந்துள்ளது.

English summary
Actress Kaajal has become known for many of the Tamil people by participating in 'Biggboss'. She went to men's toilet and posted the selfie on Twitter. One Video has been released today related on this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil