»   »  28 நாளாச்சு.... இன்னும் சினிமா ஸ்ட்ரைக் முடியாமல் தொடர்வது ஏன்?

28 நாளாச்சு.... இன்னும் சினிமா ஸ்ட்ரைக் முடியாமல் தொடர்வது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

மார்ச் 1 ம் தேதி புதுப்பட வெளியீடுகளை நிறுத்துவதில் ஆரம்பித்த திரையுலக வேலை நிறுத்தம், கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகத் தொடர்கிறது.

இந்த ஸ்ட்ரைக் எப்போதுதான் முடிவுக்கு வரும்... ? தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜிடம் பேசினோம்.

Why Cinema strike is still going on

அவர் கூறுகையில், "2005 க்கு, பிறகு பிரிண்ட் சிஸ்டம் (படப்பெட்டி) முடிந்து டிஜிட்டல் சினிமா காலம் வந்து விட்டது.

இது இங்கு மட்டும் இல்லை உலகம் முழுக்க ஏற்பட்ட மாற்றம். அதற்காக ஃபிலிம் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டு 1,70,000 பேர் வேலையிழந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான் தமிழ் நாட்டிலும் பழைய முறை மாறி டிஜட்டல் சினிமா சிஸ்டம் ஆரம்பம் ஆகியது.

இதனால் தயாரிப்பாளருக்கு ஒரு பிரிண்டுக்கு, பாதி பணம் மிச்சம் ஏற்பட்டதென்பது உண்மை.

அதே நேரம் தயாரிப்பாளர்கள் செலுத்தும், vpf என்று சொல்லப்படும் அந்த கட்டணம் திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜக்டருக்கும் சேர்த்து தான் என்பது அப்பொழுது தெரியாது.

ஒரு புரொஜக்டர் என்பதை திரையரங்கு உரிமையாளர்தான் தான் வாங்கி வைக்க வேண்டும். இதுதான் சட்டம், அந்த திரையரங்கிற்கு தான் அரசு லைசென்ஸ் வழங்கும், வருடா வரும் புதுப்பிக்கப்படும்.

இப்படி இருக்க புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் அந்த vpf எனப்படும் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்

சரி, மாற்றத்தை ஏற்றுக் கொண்டு கட்டணம்,செலுத்துவது நியாமானது, ஏற்றுக் கொள்ளலாம். அதே சமயம் எத்தனை வருடம் இப்படிக் கட்டமுடியும்.... இதுதான் கேள்வி?

Why Cinema strike is still going on

ஒரு 5 வருடம் தொடா்ந்து கட்டினால் புரொஜக்டர் தியேட்டருக்கு சொந்தம் ஆகி விடும்,

ஆனால் தயாரிப்பாளர்கள் 12 வருடங்கள் கட்டியும் முடியாமல், இன்னும் தொடர்ந்து கட்டவேண்டும் என்று டிஜிட்டல் நிறுவனங்கள் சொல்வதை ஏற்க தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

இந்த நியாயமான கோரிக்கைக்கு திரையரங்குகளும் ஆதரவளிக்க வில்லை. இது தான் பிரச்சினைக்கான காரணம். வேதனையான காரணம்.

சரி ஒரு திரையரங்கு உரிமையாளர் ஒரு புரஜக்டரை (E.cinema), சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் என்ன செலவாகும் பார்க்கலாம்.

ஒரு புரொஜக்டர், & ஒரு சர்வர் (D.cinema) விலை ரூபாய் 6,00 000 என்று வைத்துக் கொள்வோம். இதை ஜந்து வருட தவணையாக செலுத்துவது என்று எடுத்துக் கொண்டால்
6,00,000/ 5 =1,20,000 .ஒரு வருடத்திற்கு ரூபாய் 1,20,000.இதையே மாதமாகக் கொண்டால் 1,20,000/12=10,000. அதாவது மாதா,மாதம் ரூபாய் பத்தாயிரம் செழுத்தினால் தவணைமுடிந்து விடும்.

இந்த 10,000 ஜ தான், தயாரிப்பாளர் மாதம், 47,200 ஆக கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது எந்த விதத்தில் நியாயம். மேலும் ஒரு முக்கிய விசயம் புரொஜக்டரை திரையரங்கு உரிமையாளர் சொந்தமாக வைத்துக் கொண்டால் விளம்பர வருமானம் இதை விட அதிகமாகவே, வர வாய்ப்பு இருக்கிறது.

அதாவது புரொஜக்டர் செலவு, விளம்பரத்திலேயே வந்து விடும். இந்த கணக்கு ஏன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு புரியவில்லையென்று தெரிய வில்லை.

தயாரிப்பாளர்கள் இனி எங்களால் செலுத்த முடியாது என்று சொல்வதின் அர்த்தம், கட்ட வழியில்லை என்பது தான்.

திரையரங்கு உரிமையாளர்கள் இதை உணர்ந்து , புரிந்துகொள்ள வேண்டும், என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

English summary
Producers Council Secretary Durairaj has explained why the cinema strike is still going on.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X