நானே வருவேன் ப்ரோமோஷனில் தனுஷ் கலந்துகொள்ளாதது இதற்கு தானா?... வெளியானது சீக்ரெட்
சென்னை: தனுஷ் நடிப்பில் செப்டம்பர் 29ம் தேதி வெளியான நானே வருவேன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
நானே வருவேன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் ஏன் கலந்துகொள்ளவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வனுடன் மோதல்
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தனுஷின் நானே வருவேன் செப்டம்பர் 29ம் தேதி வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரித்துள்ள இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நானே வருவேன், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறமுடியவில்லை. அதற்கு பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியே காரணமாக பார்க்கப்படுகிறது.

தனுஷின் நடிப்புக்கு பாராட்டு
ஹீரோ, வில்லன் என தனுஷின் அசுரத்தனமான ஆக்டிங் கை கொடுத்தாலும், திரைக்கதை சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நானே வருவேன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் கலந்துகொள்ளாதது மில்லியன் டாலர் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு தயாரிப்பாளர் தாணு தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. தனுஷும் ஏற்கனவே தாணு மீது கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. .

ரிலீஸ் தேதியில் தான் சிக்கல்
பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக தான் நானே வருவேன் படத்துக்கு மிகப்பெரிய வசூல் இல்லை எனக் கூறப்படுகிறது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், தனுஷ், செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைந்ததால் ரசிகரக்ளிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதனால், பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போது நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என தயாரிப்பாளர் தாணுவிடம் தனுஷ் கூறியுள்ளாராம். ஆனால், அதைக் கேட்காமல் தாணு ரிலீஸ் செய்ததால் தான் நானே வருவேன் ப்ரமோஷன்களில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிடிவாதமாக இருந்த தாணு
நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வனுடன் வெளியிடுவது குறித்து தாணு ஏற்கனவே பேசியிருந்தார். அதில், "இந்த ஆயுதபூஜை பண்டிகைக்கான விடுமுறையை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை. இதேமாதிரிதான் தனுஷின் அசுரன் படத்தையும் ரிலீஸ் செய்தேன். ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசானாலும் அந்தந்த படங்களின் தகுதிக்கேற்ப சிறப்பான வரவேற்பை பெறும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நானே வருவேன் படம் முதலுக்கு மோசம் இல்லாத வசூலை செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











