Don't Miss!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிவகார்த்திகேயன், அனிருத் மீது தனுஷுக்கு கோபம் வந்தது இதனால் தான்: ஃபளாஷ்பேக் கதை தெரியுமா?
சென்னை: தமிழில் முன்னணி நடிகரான தனுஷ், திறமையான பலருக்கு அவரது படங்களில் வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.
அனிருத், சிவகார்த்திகேயன் இருவரது ஆரம்ப காலங்களில் தனுஷ் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்.
அனிருத், சிவகார்த்திகேயன் இருவரிடமும் தனுஷ் ஒருமுறை கோபம் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Eeramana rojave 2:உயிருக்குப் போராடும் காவியாவின் கணவர்..அடுத்து என்னவாகும் இன்றைய எபிசோடு!

தனுஷின் அபார வளர்ச்சி
'துள்ளுவதோ இளமை' படத்தில் தனுஷ் அறிமுகமான போது, அவர் மீது பலருக்கும் பெரிதாக நம்பிக்கை இல்லை எனலாம். 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'அது ஒரு கனா காலம்', 'பொல்லாதவன்' ஆகிய திரைப்படங்கள் தான், தனுஷின் திறமையை வெளிக்காட்டின. அதேநேரம், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளமும், தனுஷின் வளர்ச்சிக்கு காரணம் என, விமர்சகர்கள் கூறினர்.

புதியவர்களுக்கு வாய்ப்பு
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கியதும், புதியவர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்புகள் வழங்கினார் தனுஷ். அவரது நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'எதிர் நீச்சல்' படத்தை தயாரித்த தனுஷ், அதில் அனிருத்துக்கும் சான்ஸ் கொடுத்தார்.

பருந்தான ஊர் குருவிகள்
தமிழ் சினிமாவில் தங்களுக்கான தனித்துவமான அடையாளத்துக்காக காத்திருந்த சிவகார்த்திகேயனும் அனிருத்தும், அப்படியே படிப்படியாக முன்னேறினர். அப்போதும் கூட, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் மூவரும் நெருங்கிய நண்பர்களாகவே வலம்வந்தனர். ஒருகட்டத்தில் அனிருத்தும் சிவகார்த்திகேயனும் புகழின் உச்சத்துக்கே சென்றனர், ஹிட் மேல் ஹிட் கொடுத்து கோலிவுட் ரசிகர்களை மெர்சலாக்கினர். அதேபோல் தனுஷும் தனது கேரியரில் உச்சம் தொட்டார்.

இதுதான் காரணமா?
இந்நிலையில், சிவகார்த்தியன் நடிப்பில் புதிய படத்தை தயாரிக்க தனுஷ் விரும்பியதாகத் தெரிகிறது. இதற்காக அவரிடம் போன தனுஷ் கால்ஷீட் கேட்டுள்ளாராம். அதற்கு அவர் எனக்கு இத்தனை கோடிகள் சம்பளம் வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. இதேமாதிரியே அனிருத்திடமும் தனுஷ் கால்ஷீட் கேட்க, அவரும் கோடிகளில் சம்பளம் கேட்டுள்ளார்.

இதனால் தான் தனுஷுக்கு கோபம்
இதனால் நடிகர் தனுஷ் அனிருத், சிவகார்த்தியன் இருவர் மீதும் கோபம் கொண்டதாகக் கூறப்படுகிறது. நான் அறிமுகப்படுத்தி இந்தளவுக்கு வந்த அனிருத், சிவாகார்த்திகேயன், இப்போது என்னிடமே அதிக சம்பளம் கேட்பதா? என தனுஷ் அவர்களிடம் பேசாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும், நீண்ட வருடங்களுக்குப் பிறகு 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக அனிருத்துடன் இணைந்துள்ளார் தனுஷ்.