தனுஷின் நானே வருவேன் தாமதமாக செல்வராகவன்தான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் தனுஷ்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். எப்படிப்பட்ட கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ்.

மற்ற மொழி இயக்குநர்கள் ஆர்வம்

மற்ற மொழி இயக்குநர்கள் ஆர்வம்

இதனால் எல்லா மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ளார் தனுஷ். தனித்துவமான நடிகரான தனுஷை மற்ற மொழி படங்களிலும் நடிக்க வைக்க இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படங்கள் ரிலீஸ் ஆனது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

மீண்டும் அண்ணனுடன் தனுஷ்

மீண்டும் அண்ணனுடன் தனுஷ்

தற்போது நடிகர் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது அண்ணனான செல்வராகவனுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களின் நடித்துள்ளார். அந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் 'நானே வருவேன்' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.

நடிகை இந்துஜா ஹீரோயின்..

நடிகை இந்துஜா ஹீரோயின்..

வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் பிகில் மகாமுனி போன்ற படங்களில் நடித்த இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

தாமதத்துக்கான காரணம் என்ன?

தாமதத்துக்கான காரணம் என்ன?

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தனுஷ் பிஸியாக இருப்பதால் நானே வருவேன் படத்துக்கான கால்ஷீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

வெல்வராகவன்தான் தாமதத்துக்கு காரணம்?

வெல்வராகவன்தான் தாமதத்துக்கு காரணம்?

அதன்படி பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தேதியை செல்வராகவன் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X