»   »  'அம்மா'வை பார்க்க அஜீத் எங்கெல்லாம் சுத்தி சென்னை வந்தார் தெரியுமா?

'அம்மா'வை பார்க்க அஜீத் எங்கெல்லாம் சுத்தி சென்னை வந்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லாததால் அஜீத் ரோமானியா சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. பல்கேரியாவில் கடுங்குளிராக உள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

Why did Ajith go to Romania?

இந்நிலையில் ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்ட அஜீத் உடனே சென்னைக்கு கிளம்பினார். அப்போது பல்கேரியாவில் காலை நான்கு மணி. அங்கிருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லை.

இதையடுத்து அவர் பல்கேரியாவில் இருந்து விமானம் மூலம் ரோமானியா சென்றார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் 20 மணிநேரம் விமானத்தில் பயணம் செய்து வந்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யபட்டுள்ள இடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று இரவே பல்கேரியாவுக்கு கிளம்பிச் சென்றார்.

English summary
Ajith went to Romania from Bulgaria as there was no direct flight to Chennai. He then boarded a flight to Chennai from Romania to pay homage to Jayalalithaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil