»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: பிரபாஸே பதில் சொல்லிட்டாருப்பா!

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: பிரபாஸே பதில் சொல்லிட்டாருப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு பிரபாஸ் பதில் அளித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு இந்த படத்தில் பதில் உள்ளது.

இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பிரபாஸ் கூறுகையில்,

கட்டப்பா

கட்டப்பா

கட்டப்பா தனது எதிரியை பின்னால் இருந்து குத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்யுங்கள். பாகுபலியை பல்லாளதேவா என்று தவறாக நினைத்து பின்னால் இருந்து குத்தியிருந்தால்?

ஏன்?

ஏன்?

இல்லை என்றால் கட்டப்பா ஏன் பாகுபலியை போய் குத்தப் போகிறார்? இந்த கேள்விக்கான சஸ்பென்ஸ் படம் ரிலீஸாகும் வரை இருக்கட்டும். படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விமர்சகர்கள்

விமர்சகர்கள்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற சஸ்பென்ஸை தெரிவித்துவிட வேண்டாம் என்று விமர்சகர்களை கேட்டுக் கொள்கிறேன். படம் ரிலீஸான அன்றே சஸ்பென்ஸ் வெளியாகிவிடுமோ என்று கவலையாக உள்ளது என்றார் பிரபாஸ்.

சத்யராஜ்

சத்யராஜ்

கர்நாடகாவில் பாகுபலி 2 வெளியாவதில் பிரச்சனை இருந்தது. காவிரி போராட்டத்தின்போது தான் பேசியதற்கு சத்யராஜ் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்ததை அடுத்து பிரச்சனை தீர்ந்தது.

English summary
Why did Kattappa kill Baahubali? Prabhas has solved the riddle days before Baahubali 2 release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil