»   »  தொப்புளில் ஏன்யா சங்கை வீசின?: இயக்குனரை பார்த்து கேட்ட இலியானா

தொப்புளில் ஏன்யா சங்கை வீசின?: இயக்குனரை பார்த்து கேட்ட இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் தொப்புள் மீது சங்கை எதற்கு எறிந்தீர்கள் என்று இயக்குனர் ஒருவரிடம் கேட்டதாக இலியானா தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டின் முடிசூடா ராணியாக வலம் வந்தவர் இலியானா. பின்னர் பாலிவுட் ஆசை வந்து மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறியதாவது,

நடிகைகள்

நடிகைகள்

நடிகைகளை ஒரு பொருளாக பயன்படுத்தும் பழக்கம் தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே உள்ளது என்று கூற முடியாது. அது எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. ஏன் பாலிவுட்டிலும் கூட நடக்கிறது.

முடியாது

முடியாது

படங்களில் ஒரு பொருள் போன்று நடிக்க மாட்டேன் என்று கூற முடியாது. அது போன்ற படங்களில் நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் நம் கையில் தான் உள்ளது.

புதுமுகம்

புதுமுகம்

நடிக்க வந்த புதிதில் என்னை கவர்ச்சிக்காகவே பயன்படுத்தியபோது முடியாது என்று கூற முடியவில்லை. நான் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தபோது சில காட்சிகள் படமான விதத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.

சங்கு

சங்கு

ஒரு படத்தில் என் தொப்புள் மீது பெரிய சங்கை தூக்கி வீசினார்கள். ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று இயக்குனரிடம் கேட்டதற்கு அது அழகாக உள்ளது என்றார். ஆனால் சங்கு வெயிட்டாக இருந்தது.

பூக்கள்

பூக்கள்

என் இடுப்பில் மலர்களை தூவி ஒரு காட்சியை எடுத்தனர். எதற்காக என் இடுப்பை காட்சியாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு அது அழகாக இருப்பதாக கூறினார்கள். பெண்கள் என்றால் இடுப்பு தான் அழகு என்று அங்கு நினைக்கிறார்கள் என்றார் இலியானா.

English summary
Actor Ileana D'Cruz says it would be wrong on her part to say that she cannot be a "prop" in a movie as she has enjoyed playing a glamorous diva on screen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil