»   »  தமிழர்களை பிச்சைக்காரர்கள் என திட்டிய கன்னட நடிகையை விஷால் கண்டிக்காதது ஏன்?

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என திட்டிய கன்னட நடிகையை விஷால் கண்டிக்காதது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று விமர்சித்த நடிகை தன்யாவை ஏன் விஷால் கண்டிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது கர்நாடகாவை சேர்ந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கேவலமாக விமர்சித்தார்.

அவரின் பேச்சிற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தன்யா

தன்யா

தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து இனி தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று முறுக்கிக் கொண்டு போன தன்யா தற்போது சத்தமில்லாமல் தமிழ் வெப்சீரிஸ் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஷால்

விஷால்

ரகுவீரா கன்னட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழில் தான் பேசுவேன் என்று பேசினார் விஷால். தண்ணீரை தர மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று மேடையில் அவர் வெளிப்படையாக பேசி அங்கிருந்தவர்களை அதிர வைத்தார்.

ஏன்?

ஏன்?

தண்ணீர் பற்றி பேசியது ஓகே விஷால் ஆனால் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று திட்டிவிட்டு கொள்ளைப்புறமாக மீண்டும் கோலிவுட் வந்த தன்யாவை ஏன் கண்டிக்கவில்லை.

தமிழ்

தமிழ்

பெங்களூரில் நடந்த விழாவிலேயே தன்யாவை நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டிருக்கலாமே விஷால். உங்களுக்கு தெரியாமலா அந்த நடிகை தமிழ் வெப்சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்?

English summary
Why haven't Vishal condemn actress Dhanya Balakrishna who criticised Tamils as beggars?.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil