»   »  பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் ஓவியாவை கட்டம்கட்ட காரணம் கபடி வீரரா?

பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் ஓவியாவை கட்டம்கட்ட காரணம் கபடி வீரரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஓவியாவை ஓட ஓட விரட்டுவதற்கு காரணம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு தமிழ் தலைவாஸ் கபடிக் குழு நேற்று சென்றது. கபடி வீரர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் நன்றாக பேசியுள்ளனர். அப்போது ஒரு வீரர் ஓவியாவை பார்த்து நீங்க தான் ஜெயிக்கப் போகிறீங்க, வெளியே உங்களுக்கு தான் அமோக ஆதரவு உள்ளது என்றாராம்.

Why do Big Boss contestants target Oviya?

இதை கேட்ட ஓவியா மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க சக போட்டியாளர்களுக்கு தலையில் இடி இறங்கியது போன்றாகிவிட்டதாம். இதையடுத்து ஓவியாவை ஜெயிக்க விடாமல் விரட்டிவிடவே அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளார்களாம்.

பரணியை டார்ச்சர் செய்து ஓடவிட்டது போன்று ஓவியாவையும் ஓட விட முயற்சி செய்து வருகிறார்களாம். இத்தனை நாள் கெத்தாக இருந்த ஓவியா இன்று அழுதுவிட்டார்.

பரணி போன்று அவர் கிளம்பினால் டிஆர்பி படுத்துவிடும் என்பது பிக் பாஸுக்கு நன்றாக தெரியும். அதனால் அவ்வளவு சீக்கிரம் ஓவியாவை கிளம்பவிட மாட்டார் பிக் பாஸ்.

English summary
According to reports, big contestants are targetting Oviya after a member of Tamil Thalaivas said something to the actress yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil