»   »  நான் ஏன் இந்த வயதில் நடிகை ஷெர்லியை மணந்தேன்?: வேலு பிரபாகரன் விளக்கம்

நான் ஏன் இந்த வயதில் நடிகை ஷெர்லியை மணந்தேன்?: வேலு பிரபாகரன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வயதில் திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை வேலு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், சிவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். அவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி படம் கடந்த 2ம் தேதி ரிலீஸானது.

இந்நிலையில் அவர் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான நடிகை ஷெர்லி தாஸை திருமணம் செய்துள்ளார்.

ஷெர்லி

ஷெர்லி

2009ம் ஆண்டு வெளியான வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் நடித்தவர் ஷெர்லி தாஸ். அதில் இருந்து அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்துள்ளது.

திருமணம்

திருமணம்

நம் நாட்டில் என் வயதுக்காரரை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள். அதனால் இந்த வயதில் நான் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்ற கேள்வி எழத் தான் செய்யும் என்று வேலு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

துணை

துணை

டொனால்ட் டிரம்ப் தனது 74வது வயதில் திருமணம் செய்தாார். அவரது மனைவி மிகவும் இளமையானவர். வயதை விடுங்க, அனைத்து மனிதனுக்கும் ஆதரவு அல்லது துணை தேவை என்கிறார் வேலு பிரபாகரன்.

அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

ஷெர்லி போன்ற சிறந்த துணை கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி. அவர் என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார். இந்த வயதில் ஷெர்லி கிடைத்தது இயற்கையே எனக்கு அளித்த பரிசாக நினைக்கிறேன் என்று பிரபாகரன் கூறியுள்ளார்.

பிரபாகரன்

பிரபாகரன்

வேலு நேர்மையான, உண்மையான மனிதர். அவரை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். அதனால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம் என்கிறார் ஷெர்லி.

English summary
Director Velu Prabhakaran and his newly wed wife Shirley Das have explained the reason for getting married to the surprise of everyone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil