»   »  திலீப் அண்ணனை ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?: நடிகை காவ்யா மாதவன் பேட்டி

திலீப் அண்ணனை ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?: நடிகை காவ்யா மாதவன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தான் திலீப் அண்ணாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதன் காரணத்தை தெரிவித்துள்ளார் மலையாள நடிகை காவ்யா மாதவன்.

மலையாள நடிகை காவ்யா மாதவனும், நடிகர் திலீப்பும் கடந்த மாதம் 25ம் தேதி திடீர் என திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்தபோது தான் பலருக்கும் அந்த செய்தி தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த திருமணம் குறித்து காவ்யா ஸ்டைல் அன்ட் ஸ்டார் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

திலீப் அண்ணன்

திலீப் அண்ணன்

நான் திலீப் அண்ணனை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. யாராவது இது பற்றி என்னிடம் கேட்டிருந்தாலும் சிரித்திருப்பேன். ஆனால் அது நடந்துவிட்டது.

திருமணம்

திருமணம்

திலீப் அண்ணன் குடும்பத்தார் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பெண் கேட்டார்கள். நன்கு பழக்கமானவர் என்பதால் என் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

எங்கள் திருமணம் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் திடீர் என ரகசியமாக நடந்தது. அனைவருக்கும் கூறினால் கூட்டம் கூடிவிடும். கூட்டத்தை தவிர்க்கவே இந்த முடிவு. உறவினர்களுக்கே திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தான் தெரிவித்தோம்.

நண்பர்

நண்பர்

திலீப் அண்ணாவை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர். நடிகர் திலீப்பை விட நண்பர் திலீப்பையே எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் காவ்யா.

அண்ணன்

அண்ணன்

காவ்யா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படத்தில் திலீப் துணை இயக்குனராக பணியாற்றினார். தன்னை அங்கிள் என்று அழைத்த காவ்யாவை அண்ணா என்று கூப்பிடுமாறு கூறினார் திலீப். அதனால் தான் காவ்யா திலீப்பை அண்ணன் என அழைக்கிறார்.

English summary
Malayalam actress Kavya Madhavan has explained as to why she married actor Dileep suddenly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil