»   »  அமலா பாலை சந்தித்து ஏன், தகவல் கொடுத்தது யார்?: தொழில் அதிபர் வாக்குமூலம்

அமலா பாலை சந்தித்து ஏன், தகவல் கொடுத்தது யார்?: தொழில் அதிபர் வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை குடுத்த தொழிலதிபர் கைது

சென்னை: நடிகை அமலா பாலை சந்தித்து பேசியது ஏன் என்று கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் அழகேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கும் அழகேசன்(40) என்ற தொழில் அதிபர் தன்னிடம் வந்து பாலியல் தொழிலுக்கு(sexual trade) அழைப்பது போன்று பேசியதாக நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகேசனை கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

மலேசியாவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் அமலா பாலுக்கு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டிக்கு வர அமலா பால் சம்மதித்துள்ளார் என்று என் நண்பர் பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என அழகேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேனேஜர்

மேனேஜர்

அமலா பால் பார்ட்டியில் கலந்து கொள்வதை மீண்டும் உறுதி செய்தி வருமாறு கூறி பாஸ்கர் அமலாவின் மலேசியா தொடர்பு எண்ணை அளித்தார். அந்த எண்ணுக்கு போன் செய்தபோது அமலாவின் மேனேஜர் எடுத்து அவரை நடனப் பயிற்சி பள்ளியில் சென்று பார்க்குமாறு கூறினார் என்று அழகேசன் விசாரணையின்போது கூறியுள்ளார்.

நான் இல்லை

நான் இல்லை

அழகேசனிடம் நான் பேசவே இல்லை. அவர் எனக்கு போன் செய்யவே இல்லை என்று அமலா பாலின் மேனேஜர் தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடம் நேரம் எல்லாம் தெரிந்து தான் அழகேசன் வந்ததாக அமலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்

புகார்

அழகேசன் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசியதால் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்ததாக அமலா பால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

English summary
Azhagesan who got arrested in connection with asking sexual favour from actress Amala Paul said that he went to meet her at the dance school as his friend Bhaskar asked him to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil