»   »  விஐபி 2 இசை வெளியீட்டு விழாவுக்கு தனுஷ் மனைவி ஏன் வரவில்லை?: சவுந்தர்யா விளக்கம்

விஐபி 2 இசை வெளியீட்டு விழாவுக்கு தனுஷ் மனைவி ஏன் வரவில்லை?: சவுந்தர்யா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளாததன் காரணத்தை தெரிவித்துள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.

விழாவில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை.

தனுஷ்

தனுஷ்

இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் யார், யாருக்கோ மாஞ்சு, மாஞ்சு நன்றி சொன்னார். மனைவி ஐஸ்வர்யா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஒரு முக்கிய விவகாரம் தொடர்பாக தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தான் ஐஸ்வர்யா விஐபி 2 பட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

சவுந்தர்யா

சவுந்தர்யா

விஐபி 2 விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளாததன் காரணத்தை தற்போது சவுந்தர்யா தெரிவித்துள்ளார். இயக்குனரான ஐஸ்வர்யா புதிய படத்திற்கு கதை எழுதுவதில் பிசியாக உள்ளார். அதனால் தான் விழாவுக்கு வரவில்லை என்று சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

ஐஸ்வர்யா விஐபி 2 விழாக்களில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரின் வாழ்த்துக்கள் எப்பொழுதும் எங்களுக்கு உண்டு. தனுஷை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அக்கா என சவுந்தர்யா கூறியுள்ளார்.

English summary
Soundarya Rajinikanth said that her sister Aishwarya skipped VIP 2 audio launch as she is busy with couple of scripts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil