»   »  அந்த ஒரு விஷயத்திற்காக காக்க காக்க படத்தில் நடிக்க மறுத்த அஜீத்: கவுதம் மேனன்

அந்த ஒரு விஷயத்திற்காக காக்க காக்க படத்தில் நடிக்க மறுத்த அஜீத்: கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்க காக்க படத்தில் அஜீத் நடிக்காததன் காரணத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் காக்க காக்க படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு என்றால் அது மிகையல்ல.

Why does Ajith say NO to Kaakha Kaakha?

அந்த படத்தில் நடிக்க கவுதம் மேனன் முதலில் அஜீத்திடம் தான் கேட்டுள்ளார். ஆனால் அஜீத் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டியின்போது இது குறித்து கவுதம் மேனன் கூறுகையில்,

காக்க காக்க படத்தின் கதையை நான் முதலில் அஜீத்திடம் தான் கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் சரியாக இருக்காது என்று கூறினார்.

அந்த காரணத்தினால் தான் படத்தில் நடிக்க மறுத்தாரே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.

English summary
Director Gautham Menon has revealed the reason as to why Ajith refused to act in his movie Kaakha Kaakha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil