»   »  ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்கள், ஒன்னு போதாதா?: ஜோதிகா பொளேர்

ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்கள், ஒன்னு போதாதா?: ஜோதிகா பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர்களாகிய நீங்கள் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் நான்கு காதலிகள் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று இளைஞர்கள் நினைப்பார்கள்.ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

ஜோதிகா ஆவணப்படம் எடுப்பவராக நடித்துள்ள படம் மகளிர் மட்டும். பிரம்மா இயக்கியுள்ள இந்த படத்தில் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா பேசும்போது,

அம்மா

அம்மா

சூர்யாவோட அம்மா என் அம்மா. சூர்யா, கார்த்திக்கும் சேர்த்து எனக்கும் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சாப்பாடு அனுப்புவாங்க. இந்த குடும்பத்தோட ஆண்கள் பெண்களை எப்பொழுதுமே ஆதரிப்பார்கள். அப்பா சிவக்குமார் எனக்கு பெரிய சப்போர்ட்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களே பெண்களுக்கு கண்ணியமான கதாபாத்திரங்களை கொடுங்க. நடிகைகளுக்கு கொஞ்சம் அறிவாளியான கதாபாத்திரங்கள் கொடுங்க.

உடை

உடை

உங்க வீட்டுப் பெண்கள் போன்ற கதாபாத்திரம் கொடுங்க. உங்க வீட்டுப் பெண்கள் போன்று உடை கொடுக்க மாட்டீர்கள் என தெரியும். காமெடியன்களோட நிப்பாடி வச்சுக்கிட்டு டபுள் மீனிங் வசனங்கள், கேவலமான இன்ட்ரொடக்ஷன் காட்சிகள், வெட்கமில்லாமல் ஒரு ஹீரோவுக்கு பின்னால் சுற்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ என்று சொல்வது. தயவு செய்து இதை நிறுத்துங்கள். இது இளைஞர்களை பாதிக்கும்.

ஹீரோயின்

ஹீரோயின்

நீங்கள் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் நான்கு காதலிகள் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று இளைஞர்கள் நினைப்பார்கள்.ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும். இரண்டு, மூன்று என்று போய்க் கொண்டிருக்கிறது.

English summary
Jyothika said that if a director has four heroines for his hero then youths will think that there is nothing wrong in having four girl friends.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil