»   »  மருமகள் சமந்தாவை பார்த்து நாகர்ஜுனா ஏன் 'அப்படி' சொன்னார்னா...

மருமகள் சமந்தாவை பார்த்து நாகர்ஜுனா ஏன் 'அப்படி' சொன்னார்னா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: என் அம்மாவே எனக்கு மகளாக வந்துள்ளார் என்று சமந்தா பற்றி நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும், அவரது காதலி சமந்தாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் நடந்தன.

வாழ்த்து

வாழ்த்து

நிச்சயதார்த்தத்தில் நாகர்ஜுனா, சமந்தாவின் குடும்பத்தார் மற்றம் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமந்தா, சைதன்யாவுக்கு அவர்களின் குடும்பத்தார் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

நாகர்ஜுனா

நிச்சயதார்த்தத்தின்போது எடுத்த புகைப்படங்களை நாகர்ஜுனா ட்விட்டரில் வெளியிட்டார். தனது மூத்த மகனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று ட்வீட்டி அறிவித்தார்.

சமந்தா

என் தாயே எனக்கு மகளாகிவிட்டார் என்று சமந்தா, சைதன்யா நிச்சயதார்த்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தெரிவித்திருந்தார் நாகர்ஜுனா. சமந்தா எப்படி நாகர்ஜுனாவுக்கு அம்மா என்று பலரும் வியந்தனர்.

மனம்

மனம்

சூப்பர் ஹிட்டான மனம் தெலுங்கு படத்தில் சமந்தா நாகர்ஜுனாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதை மனதில் வைத்து தான் என் தாயே எனக்கு மகளாகியுள்ளார் என ட்வீட்டியுள்ளார் நாகர்ஜுனா.

English summary
Actor Nagarjuna has addressed daughter-in-law Samantha as mother in his tweet as she acted as his mom in Manam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil