»   »  தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?

தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நித்யா மேனன் ஏன் புதுப்பட வாய்ப்புகளை ஏற்பது இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். நடிப்பது தவிர பாடல்களும் பாடி வருகிறார். கவர்ச்சியில் நம்பிக்கை இல்லாத அவர் நடிப்புக்கு பெயர் போனவர்.

இந்நிலையில் அண்மை காலமாக அவரை பற்றி ஒரு செய்தி உலா வருகிறது.

விஜய் 61

விஜய் 61

நித்யா மேனன் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

புதுப்படம்

புதுப்படம்

நித்யா மேனன் கையில் புதுப்படங்கள் எதுவும் இல்லை. தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை அவர் ஏற்க மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பளம்

சம்பளம்

நித்யா மேனன் ஓவராக சம்பளம் கேட்பதால் அவரை யாரும் நடிக்க அழைப்பது இல்லை என்று சிலரும், தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிப்பதால் படம் இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.

இயக்கம்

இயக்கம்

உண்மையில் நித்யா மேனனுக்கு இயக்குனர் ஆகும் ஆசை வந்துள்ளதாம். அதனால் தான் புது படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். இரண்டு கதை வைத்துள்ளாராம். அதில் ஒரு கதை படம் பண்ணும் அளவுக்கு தயாராகிவிட்டதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
According to reports, Nithya Menen is refusing to accept new movie offers as she is interested in becoming a director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil