»   »  ஆமா, ரஜினி ஏன் மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை சந்தித்தார்?

ஆமா, ரஜினி ஏன் மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை சந்தித்தார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மனைவி அம்ருதா பட்னாவிஸை சந்தித்து பேசியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

காலா படப்பிடிப்புக்காக கடந்த 10 நாட்களாக ரஜினி மும்பையில் இருந்தார். தாராவி, அந்தேரி பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அவர் நேற்று சென்னை திரும்பினார்.

Why does Rajini meet Amruta Fadnavis?

மும்பையில் இருந்தபோது அவர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவை சந்தித்து பேசியுள்ளார். அவர்களின் சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை அம்ருதா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியும், அம்ருதாவும் எதற்காக சந்தித்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது. காலா படத்தில் அம்ருதா பாட்டு பாட உள்ளதாக கூறப்படுகிறது.

படம் விஷயமாகவே அவர்கள் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அம்ருதா காலாவில் பாடுகிறாரா, இல்லையா என்பதை ரஞ்சித் தான் உறுதி செய்ய வேண்டும்.

English summary
Buzz is that Rajinikantha met Maharashtra CM's wife Amruta in connection with his upcoming movie Kaaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil