»   »  ரஜினி ஏன் தனுஷ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார்?

ரஜினி ஏன் தனுஷ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க மருமகனின் தயாரிப்பு நிறுவனம் மீது உள்ள நம்பிக்கை தான் காரணமாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ரஞ்சித், ரஜினி மீண்டும் கூட்டணி சேரும் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தனுஷ்

தனுஷ்

தனுஷுக்கும் இளம் நடிகை ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால் ஐஸ்வர்யா கவலை அடைந்ததாகவும், அந்த கருமத்தை விட்டுவிட கன்டிஷன் போட்டு தான் ரஜினி தனது மருமகன் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ரஜினி

ரஜினி

ரஜினி அந்த சர்ச்சைக்குரிய நடிகையை தனக்கு ஜோடியாக்குமாறு கூறியதாகவும், அப்படி செய்தால் தான் மருமகனையும், அந்த நடிகையையும் தன் நேரடி கண்காணிப்பில் வைக்க முடியும் என்று அவர் நினைத்ததாகவும் கூறப்பட்டது.

இல்லையாம்

இல்லையாம்

ரஜினி தனுஷ் தயாரிப்பில் நடிக்க நடிகை பிரச்சனை காரணம் இல்லையாம். மருமகனின் தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்களை தயாரிப்பதை பார்த்து தான் அவர் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க முன்வந்தாராம்.

ரஞ்சித்

ரஞ்சித்

ரஞ்சித்துடன் பணியாற்ற ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம் நடத்தும் தனது மருமகனையே தன்னுடைய அடுத்த படத்தை தயாரிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இவ்வாறு செய்துள்ளாராம் ரஜினி.

English summary
It is told that Rajinikanth has chosen Dhanush as his next movie's producer, as he trusts his son-in-law's production house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil