»   »  அது என்ன தல படத்திற்கு 'விசுவாசம்'னு ஒரு தலைப்பு?

அது என்ன தல படத்திற்கு 'விசுவாசம்'னு ஒரு தலைப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அது என்ன தல படத்திற்கு 'விசுவாசம்'னு ஒரு தலைப்பு?- வீடியோ

சென்னை: சிவா ஏன் தல படத்திற்கு விசுவாசம் என்று பெயர் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இயக்குனர் சிவா, அஜீத் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் விசுவாசம். படத்தின் தலைப்பை சிவா அவ்வளவு சீக்கிரம் அறிவிக்க மாட்டார்.

ஐயா, தலைப்பை கொஞ்சம் சொல்லுங்கய்யா என்று தல ரசிகர்கள் கெஞ்சி, கதறிய பிறகே அதுவும் சாவகாசமாக தலைப்பை அறிவிப்பார். ஆனால் இம்முறை பட வேலைகளை துவங்கும் முன்பே தலைப்பை வெளயிட்டுவிட்டார் சிவா.

தலைப்பு

தலைப்பு

அட, நம்ம சிவாவா? கெஞ்ச விடாமல் அவராகவே தலைப்பை அறிவித்துவிட்டாரே என்று தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் தலைப்பை தேடவில்லையாம். எளிதில் கிடைத்துவிட்டதாம்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

என் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக உள்ளார்கள். நான் அவர்களுக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அஜீத் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

அஜீத்

அஜீத்

அஜீத் அடிக்கடி விசுவாசம் பற்றி பேசியது சிவாவுக்கு நினைவுக்கு வரவே இதுவே நல்லா இருக்கே என படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார். அதனால் தான் இந்த முறை தலைப்பை கேட்டு ரசிகர்களை கெஞ்சவிடவில்லையாம்.

லுக்

லுக்

விசுவாசம் படத்தில் அஜீத் தலைக்கு டை அடித்து செம ஸ்டைலாக வந்து மிரட்டப் போகிறாராம். அய்யோ, தல சீக்கிரம் வா தல உன்னை கருப்பு முடியில் ஸ்டைலா பார்த்து எவ்வளவு நாளாச்சு என்கிறார்கள் ரசிகர்கள்.

English summary
Director Siva has titled his upcoming movie with Ajith as Viswasam. There is a reason for naming the movie as Viswasam it seems. Ajith frequently uses the word while referring to his loveable fans and that made Siva to pick the word.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil