»   »  தனுஷுடன் கெட் டுகெதர்: அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த்?

தனுஷுடன் கெட் டுகெதர்: அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடந்த கெட் டுகெதர் பற்றி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து கெட் டுகெதர் நடந்தது.

அதில் தனுஷ் நடிக்கும் விஐபி2 படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

 சவுந்தர்யா

சவுந்தர்யா

கெட் டுகெதரின் போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் விஐபி 2 படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ரஜினிகாந்த். மேலும் வாழ்க்கை, வேலையை விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

விபத்து

விபத்து

கெட் டுகெதர் பற்றி ட்வீட் போட்ட சில மணிநேரங்களில் சவுந்தர்யா ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியதில் டிரைவர் மணி காயம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது.

தனுஷ்

தனுஷ்

சவுந்தர்யாவின் கார் மோதியதில் காயம் அடைந்த மணி போலீசுக்கு போவேன் என்று கூறியதாகவும், தனுஷ் வந்து பேசி சமாதானம் செய்து வழக்கு எதுவும் பதியாமல் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

டவீட்

டவீட்

கார் விபத்து செய்தி வெளியான சில மணிநேரத்தில் சவுந்தர்யா பவர் பாண்டி கெட் டுகெதர் பற்றி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார். ஏன் நீக்கினார் என தெரியவில்லை.

English summary
VIP 2 director Soundarya Rajinikanth has deleted her tweet about get together with Dhanush' Power Paandi team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil