»   »  பைரவாவில் விஜய்க்கு ஏன் 'விக்' வைத்தார்கள் தெரியுமா?

பைரவாவில் விஜய்க்கு ஏன் 'விக்' வைத்தார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் விஜய்க்கு எதற்காக விக் வைப்பட்டது என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. தமிழக ரசிகர்களை போன்றே கேரள ரசிகர்களும் பைரவாவை காண மிகவும் ஆவலாக உள்ளனர்.


படத்தை தெறிக்கவிட வேண்டும் என்ற முடிவோடு உள்ளார்கள் ரசிகர்கள்.


விக்

விக்

பைரவா படத்தில் விஜய்க்கு விக் வைத்துள்ளனர். எங்க தளபதி முடியே அழகு அப்படி இருக்கும்போது விக்கை வைத்து கவுத்திட்டார்களே என்று விஜய் ரசிகர்களுக்கு லைட்டா வருத்தம் உள்ளது.


விஜய்

விஜய்

தெறி படத்தை அடுத்து விஜய் பைரவாவில் நடித்தார். தெறி படத்திற்காக அவர் முடியை ஒட்ட வெட்டியிருந்ததால் விக் வைத்ததாக படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


அதுக்கு?

அதுக்கு?

ஒட்ட வெட்டியிருந்தால் என்ன என்று ரசிகர்கள் நினைக்கலாம். சண்டை காட்சிகளில் விஜய் ஸ்டைலாக முடியை கோதி விட வேண்டுமாம். அதற்காக விஜய்க்கு என்று பிரத்யேகமாக இந்த விக்கை செய்தார்களாம். இதையும் சுகுமார் தான் கூறியுள்ளார்.
எல்லாம் சரி

எல்லாம் சரி

விஜய்யின் இயற்கையான முடியே அவருக்கு அழகு. விக்கும் நல்லாத் தான் இருக்கு. ஆனால் இன்னும் கொஞ்சம் நல்ல விக்கா பார்த்து வச்சிருக்கலாம் என்ற வருத்தம் தளபதி ரசிகர்களுக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.


முடி

முடி

விஜய்க்கு தலைமுடி உதிர்ந்து அடர்த்தி இல்லாமல் இருந்ததால் விக் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் சுகுமார் விளக்கம் அளித்து ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளார்.


English summary
Bairavaa cinematographer Sukumar said that Vijay sports wig in the movie for a reason.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil