»   »  எல்லோரும் ஏன் ரஜினி வில்லன் வீட்டு வேலைக்காரராக போட்டி போடுகிறாங்க?

எல்லோரும் ஏன் ரஜினி வில்லன் வீட்டு வேலைக்காரராக போட்டி போடுகிறாங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அவர் வீட்டில் பணியாளாக சேரத் துடிக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாமே ஹிட்.

இந்த ஆண்டும் அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.

புத்தாண்டு

புத்தாண்டு

அக்ஷய் புத்தாண்டை கொண்டாட தனது மனைவி டிம்பிள் கன்னாவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் தங்கியிருந்த வீட்டு பணியாளின் மகன் வாலன்டினோவுடன் அக்கி செல்ஃபி எடுத்தார்.

அக்ஷய்

கேப் டவுனில் என் வீட்டு பணியாளின் மகன் வாலன்டினோவை பாருங்க மக்களே. வீட்டில் அனைவருக்கும் அவனை பிடித்துள்ளது என அக்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நான், நான்

நான், நான்

அக்கி வாலன்டினோவுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாஸ், நாங்க உங்க வீட்டுக்கு வேலைக்கு வருகிறோம் என்று ட்வீட் மேல் ட்வீட் போட்டுள்ளனர்.

ஹோட்டல்

அக்ஷய் குட்டிப் பையன் வாலன்டினோவுடன் செல்ஃபி மட்டும் எடுக்கவில்லை, குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்றபோது அவனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

English summary
Fans want to be Bollywood actor Akshay Kumar's house help after seeing a picture of him on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil