இப்படி ஏமாத்திட்டீங்களே தனுஷ்: ரஜினி ரசிகர்கள் லைட்டா கோபம்
Recommended Video

சென்னை: தனுஷ் மீது ரஜினி ரசிகர்கள் லைட்டா கோபமாக உள்ளார்கள்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரை பார்த்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
டீஸரிலேயே தலைவர் தெறிக்கவிடுகிறார், அப்போ படத்தில் சொல்லவா வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

டீஸர்
காலா டீஸர் மார்ச் 2ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார். ஆனால் யாரோ விஷமிகள் டீஸரை லீக் செய்ய வேறு வழியில்லாமல் நேற்று இரவே சத்தமின்றி டீஸரை வெளியிட்டது படக்குழு.

தலைவர்
அது என்ன தலைவர் படத்தை பார்த்தால் எப்படி தெரியுது, இப்படி லீக் செய்றாங்க. அவங்க யார் என்று கண்டுபுடிங்க பீம்ஜி என்று ரஞ்சித்திற்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபம்
மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு தானே டீஸர் வெளியாகும் என்று நேத்து நைட் சாப்பிட்டுவிட்டு தூங்கிய பிறகு ரிலீஸ் செய்திருக்கிறீர்களே தனுஷ். இது நியாயமா என்று ரஜினி ரசிகர்கள் லைட்டா கோபம் அடைந்துள்ளனர்.
சூப்பர்
காலா டீஸர் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வயசானாலும் தான் இன்னும் கிங் தான் என்பதை தலைவர் நிரூபித்துவிட்டார் என்று ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











