Don't Miss!
- Finance
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சர்ப்ரைஸ் கொடுத்த டாடா மோட்டார்ஸ்.. ரூ.2958 கோடி லாபம்..!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- News
தம்மாதுண்டு எறும்பு போதும்! நயா பைசா செலவின்றி 10 நிமிடத்தில் கேன்சரை கண்டுபிடிக்கலாமாம்! எப்படி?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
சேரனை ஏன் கதாநாயகனாக தேர்வு செய்தேன்... காரணத்தை கூறிய தங்கர்பச்சான்!
சென்னை : உயிரோட்டமான கிராமத்து படங்களை இயக்கி அதில் முழு வெற்றியையும் பெற்றவர் இயக்குனர் தங்கர்பச்சான்
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த கொண்டுள்ளார்
இந்த நிலையில் சொல்ல மறந்த கதை படத்தில் சேரனை எதற்காக கதாநாயகனாக நடிக்க வைத்தார் என்று காரணத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
அட
செம
தகவலா
இருக்கே...பீஸ்ட்
படத்திற்கு
விஜய்
வாங்கிய
சம்பளம்
எவ்வளவு
தெரியுமா?

எதார்த்தமான காதல் படம்
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அழகி என்ற அற்புதமான திரைக்காவியத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தங்கர்பச்சான். தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் பயின்று அழகி படத்தின் மூலம் இயக்குனராக முத்திரையை பதித்தார். முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அழகியில் நடிகர் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருப்பதால் தேவையானி, நந்திதா தாஸ், மோனிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். மிகவும் எதார்த்தமான மனதை உருக்கும் காதல் படமாக வெளியான அழகி படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அழகி கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தங்கர்பச்சான் அடுத்து இயக்கிய திரைப்படம் சொல்ல மறந்த கதை

வீட்டோடு மாப்பிள்ளையாக
சமூகத்தில் இன்றளவும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் தான் கணவர்கள் வீட்டுக்கு செல்வார்கள் ஆனால் அதையும் தாண்டி சிலர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார்கள். வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன கணவர்மார்கள் எந்த மாதிரியான அவமானங்களை எதிர் சந்திக்கிறார்கள் , சகித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை மிகவும் தத்துரூபமாக வாழ்வியலின் உண்மை தன்மை மாறாமல் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை படத்தில் காட்டியிருப்பார்.

சேரனை ஹீரோவாக அறிமுகம் செய்தார்
இந்த படத்தில் இயக்குனர் சேரன் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பார். நடிகராக முதல் படம் என எந்த ஒரு சாயலும் இல்லாமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியது சேரன் ரசிகர்கள் மனதில் நடிகராகவும் இடம் பிடித்திருப்பார். அழகி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக முன்னணி நடிகரை தங்கர்பச்சான் இயக்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் சேரனை எதற்காக சொல்ல மறந்த கதை படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார் என்ற காரணத்தை தங்கர்பச்சான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

படப்பிடிப்பில் ஓய்வில்லாமல் உழைத்தார்
அதாவது சேரன் இயக்கத்தில் பாண்டவர்பூமி படத்தில் தங்கர்பச்சான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் கொஞ்சம்கூட ஓய்வில்லாமல் அயராமல் உழைத்த கொண்டிருந்த சேரன் வெயில் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். எப்படி ஒரு மனுஷன் இப்படி உழைக்கிறார் என யோசித்த நான் சேரனின் உழைப்பை பார்த்து விட்டு தன்னுடைய அடுத்த படத்தில் சேரன் தான் ஹீரோ என முடிவு செய்தேன். அந்த முடிவுக்கு பலரும் மறுப்பு தெரிவித்தார்கள். இருப்பினும் சொல்ல மறந்த கதை படத்தில் சேரனை ஹீரோவாக அறிமுகம் செய்தேன்.

கதாநாயகனாக தேர்வு செய்தேன்
சொல்ல மறந்த கதை படத்தில் ஹீரோவாக நடிக்க சேரனை முதல்முறையாக அணுகியபோது அவர் சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பெரும் சமாதானத்திற்கு பிறகு சேரன் சொல்ல மறந்த கதை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மேலும் இந்தப் படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது . இவ்வாறு சேரனை எப்படி கதாநாயகனாக தேர்வு செய்தேன் என்ற காரணத்தை தங்கர்பச்சான் பகிர்ந்துள்ளார்.