»   »  காவ்யா மாதவனை ஏன் கல்யாணம் பண்ணேன் தெரியுமா? - திலீப்பின் புது விளக்கம்

காவ்யா மாதவனை ஏன் கல்யாணம் பண்ணேன் தெரியுமா? - திலீப்பின் புது விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காவ்யா மாதவனை 2வது திருமணம் செய்ததற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார் நடிகர் திலீப். தங்களைப் பற்றிய வதந்திகளை உண்மையாக்கவே இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

Why I married Kavya? - Dileep's new explanation

இந்த நிலையில் திலீப் - மஞ்சு வாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

அடுத்த சில மாதங்களில் நடிகை காவ்யா மாதவனை திலீப் 2வதாக திருமணமும் செய்து கொண்டார்.

மஞ்சு வாரியருடன் குடும்பம் நடத்தி வந்தபோதே திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது. இருவரும் அப்போது மறுத்தனர். ஆனால் அந்த கிசுகிசு கடைசியில் உண்மையானது.

இதுகுறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ள திலீப், இப்படிக் கூறியுள்ளார்:

"நான் மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்துகொண்டதற்கு என் மீது எனது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதை நான் அறிவேன். பலரும் எங்களைபற்றி தவறாகப் பேசினார்கள்.

நான் முறைப்படி விவாகரத்து பெற்றுதான் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 16 வயதில் மகள் உள்ளார். 16 வயது பெண்ணின் மனநிலை என்ன என்பது எனக்கு தெரியும். எனவே எனது மகளின் சம்மதம் பெற்ற பிறகே இந்த திருமணத்தைச் செய்தேன்.

முதலில் இந்த திருமணத்திற்கு காவ்யா மாதவனின் தாயார் சம்மதிக்கவில்லை. காவ்யாவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கும்படி என்னிடமே கூறினார். ஆனால் எங்களை இணைத்து பேசப்பட்ட அவதூறுகளை மாற்றவே நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்."

English summary
Actor Dileep has gave a new explanation for his recent marriage with actress Kavya Madhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil