»   »  விஐபி 2 படத்தில் அனிருத்தை கழற்றிவிட்டது ஏன்?: முதல் முறையாக தனுஷ் விளக்கம்

விஐபி 2 படத்தில் அனிருத்தை கழற்றிவிட்டது ஏன்?: முதல் முறையாக தனுஷ் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்யாததன் காரணத்தை தெரிவித்துள்ளார் தனுஷ்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள விஐபி 2 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தனுஷ் கூறியதாவது,

விஐபி 2

விஐபி 2

விஐபி 2 படம் ஆணாதிக்க படம் அல்ல. முதல் பாகத்தை போன்றே இந்த பாகமும் இளைஞர்களை வெகுவாக கவரும். அனைவரும் ரசிக்கும்படி படம் அமைந்துள்ளது.

கணவன்

கணவன்

முதல் பாகத்தில் தாயை இழந்த மகன் சாதிக்க முயற்சிப்பதை காட்டியிருந்தோம். இரண்டாம் பாகத்தில் வேலையை இழந்து திருமணமான இளைஞன் படும் கஷ்டம் உள்ளிட்டவற்றை காட்டுகிறோம்.

கஜோல்

கஜோல்

விஐபி 2 படத்தின் அச்சாணி கஜோல். அந்த கதாபாத்திரத்தை அவரை தவிர வேறு எந்த நடிகையாலும் நடித்திருக்க முடியாது. விஐபி 3 படமும் வரும். அதிலும் கஜோல் நடிப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனிருத்

அனிருத்

ஒரு இளைஞனின் துடிப்பு, உறுதியை வெளிப்படுத்த விஐபி படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம். இரண்டாம் பாகத்தில் பொறுமை மற்றும் வாழ்க்கை தத்துவம் உணர்ந்த இசையமைப்பாளர் தேவைப்பட்டதால் ஷான் ரோல்டனை தொடர்பு கொண்டோம் என்றார் தனுஷ்.

English summary
Dhanush has explained for the first time as to why music director Anirudh is not a part of VIP 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil