»   »  ஆமாம், கள்ளத்தொடர்பை ஏன் பெரிய விஷயமாக்குகிறார்கள்?: நடிகை கரீனா கபூர்

ஆமாம், கள்ளத்தொடர்பை ஏன் பெரிய விஷயமாக்குகிறார்கள்?: நடிகை கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கள்ளத்தொடர்பை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள் என பாலிவுட் நடிகை கரீனா கபூர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு காலத்தில் பேட்டி அளிக்கும்போது மனதில் பட்டதையெல்லாம் பட், பட்டென்று கூறிவிடுவார். யாதேன் படத்தில் நடித்தபோது திருமணமான ரித்திக் ரோஷனுக்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

இது குறித்து கரீனா அப்போது பிலிம்பேருக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது,

திருமணமான ஆண்கள்

திருமணமான ஆண்கள்

நானாவது திருமணமான ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைப்பதாவது. யாதேன் படத்தில் நானும், ரித்திக் ரோஷனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று யார் துடித்தது என தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை கேளுங்கள். நாங்கள் ஹாட்டான ஜோடி என்று ஒப்பந்தம் செய்தார்கள்.

ரித்திக்

ரித்திக்

ரித்திக் ரோஷன் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு நெடுநேரம் கண்ணாடி முன்பு நிற்பது பயங்கர கடுப்பாக இருக்கும். கபி குஷி கபி கம் படப்பிடிப்பின்போது கஜோல் கூட ரித்திக் மீது கடுப்பானார்.

நடிப்பு

நடிப்பு

நான் இங்கு நடிக்க வந்துள்ளேன். என்னுடன் நடிப்பது ஃபர்தீன் கானா, அபிஷேக் பச்சனா அல்லது ரித்திக் ரோஷனா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை ஈர்க்கும் ஒரே விஷயம் உணவு. அந்த ஈர்ப்பை கூட தற்போது தவிர்த்துவிட்டேன்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

எனக்கு திருமணமான ஆண்கள் வேண்டாம். ஆனால் கள்ளத்தொடர்பை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள்? ஆண்கள் பெண்களை ஏமாற்றுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

கொன்றுவிடுவேன்

கொன்றுவிடுவேன்

காதலுக்கும், ஈர்ப்புக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. என் வாழ்வில் வரும் ஆண் என்னை ஏமாற்றக் கூடாது. நானும் அவரை ஏமாற்ற மாட்டேன். என் ஆள் என்னை ஏமாற்றினார் என தெரிந்தால் அவரை கொன்றுவிடுவேன்.

English summary
Bollywood actress Kareena Kapoor asked as to why is infidelity being made such an issue?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil