»   »  ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்?: துபாயில் என்ன நடக்கிறது- உண்மை இதோ

ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்?: துபாயில் என்ன நடக்கிறது- உண்மை இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்?- வீடியோ

துபாய்: ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்று அமீரக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று இரவு மும்பை கொண்டு வரப்படுகிறது.

மதியம் 3.30 மணிக்கு துபாயில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படுகிறது என்று செய்திகள் வெளியாகின.

துபாய்

துபாய்

துபாய் போலீசாரின் தடயவியல் துறையில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் இன்னும் ஒப்படைக்கப்படவில்லையாம். இதனால் மாலை 5.30 மணி அளவில் தான் அவரின் உடல் இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் புறப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

தடயவியல் துறை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்ததும் முஹைஸ்னா கொண்டு செல்லப்பட்டு எம்பாமிங் செய்யப்படுகிறது. எம்பாமிங் செய்ய 90 நிமிடங்கள் ஆகும்.

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

துபாய் போலீசார் இறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகு இந்திய தூதரகம் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பின்னர் இமிகிரேஷன் துறையில் முடிக்க வேண்டிய ஃபார்மாலிட்டிகளை முடிக்க வேண்டும்.

இந்தியா

இந்தியா

ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என்று பப்ளிக் ப்ராசிகியூட்டர் அனுமதி அளிக்க வேண்டும். அதன் பிறகே அவரின் உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும்.

English summary
Since the forensic department of Dubai police is yet to release the body of Sridevi, other procedures are getting delayed. Sridevi's body will be brought to India tonight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil