twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதாவாக நடிக்க பாலிவுட் நடிகை ஏன்?: ஏ.எல். விஜய் விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    தலைவி படத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க விரும்பிய இயக்குநர் ஏ.எல். விஜய்- வீடியோ

    சென்னை: தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைப்பதன் காரணத்தை தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

    இங்கே நடிகைகளே இல்லாதது போன்று பாலிவுட் போய் அதுவும் கங்கனாவை அழைத்து வந்துள்ளாரே விஜய் என்று விமர்சனம் எழுந்தது.

    வயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி வயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி

    ஏ.எல். விஜய்

    ஏ.எல். விஜய்

    தலைவி படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியிடப்படும். அதனால் கங்கனா தான் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு சரியானவர். அவர் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நடிகைகளில் ஒருவர். எனவே, முக்கியமான அரசியல் தலைவியாக நடிக்க கங்கனா தான் பொருத்தமானவர் என்று நினைக்கிறேன் என்கிறார் விஜய்.

    கங்கனா

    கங்கனா

    தலைவி வெறும் பிராந்திய மொழி படம் அல்ல. கங்கனாவை தேர்வு செய்யும் முன்பு பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. ஜெயலலிதா ஒரு தேசிய தலைவி. அவருக்கு நாடு முழுவதும் மரியாதை உண்டு என்கிறார் ஏ.எல். விஜய்.

    தமிழ்

    தமிழ்

    தலைவி படத்தில் நடிப்பதை நினைத்து கங்கனா மகிழ்ச்சியில் உள்ளார். அவர் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இந்த படத்திற்காக அவர் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் கங்கனா. யாரையாவது விமர்சித்து வாங்கிக் கட்டிக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் ஜெயலிதாவாக நடிக்க வேண்டுமா என்ற பேச்சு கிளம்பிய நிலையில் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Director AL Vijay has explained as to why he has chosen Bollywood actress Kangana Ranaut for Thalaivi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X