twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்- வாரிசு பட பிரச்சினையில் அனைவரும் மவுனம் ஏன்? விளைவு மோசமாக இருக்கும்..இயக்குநர் பேரரசு ஆவேசம்

    |

    வாரிசு பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக அவரை கார்னர் செய்யும் விதமாக செயல்படுகிறார்கள் என இயக்குநர் பேரரசு குற்றம் சாட்டியுள்ளார்.

    மொழி கடந்து அனைத்து மொழி படங்களையும் நாம் நேசிக்கிறோம், ஆனால் மற்றவர்கள் நம்மை தமிழர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

    இப்படியே போனால் திரையுலகில் பெரும் சிக்கல் உருவாகும். அதற்கு முன் தமிழக தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும் என பேரரசு வலியுறுத்தியுள்ளார்.

    முதல்ல அப்பாவுக்கு விருந்து வைங்க விஜய்.. வாரிசு சர்ச்சை.. பரபரப்பை கிளப்பிய இயக்குநர் பேச்சு! முதல்ல அப்பாவுக்கு விருந்து வைங்க விஜய்.. வாரிசு சர்ச்சை.. பரபரப்பை கிளப்பிய இயக்குநர் பேச்சு!

     தென்னகம் முழுவதும் பரவும் விஜய்யின் புகழ்

    தென்னகம் முழுவதும் பரவும் விஜய்யின் புகழ்

    நடிகர் விஜய் தமிழகம் தாண்டி தென்னகம் முழுவதும் பிரபலமான நடிகர். கோலிவுட் தாண்டி டோலிவுட், மோலிவுட் உலகிலும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஜனவரியில் வாரிசு படம் வெளியாக உள்ளது. இது தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்தப்படத்தை தயாரிப்பது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர். மகேஷ்பாபு படத்தை இயக்கி புகழ்பெற்ற வம்சி இயக்குகிறார்.

     தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானம்

    தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானம்

    இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் பண்டிகை காலங்களில் பிற மொழி படங்களை திரையிட அனுமதிக்கக்கூடாது என்கிற வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் படங்களுடன் மோத உள்ள நிலையில் அது வெற்றிப்பெற்றால் அவமானம் என்பதால் இந்த முடிவெடுக்க கூட்டம் கூடி தீர்மானம் போட்டதாக விமர்சனம் எழுந்தது. பலரும் விஜய் படத்துக்கு எதிரான இம்முடிவை எதிர்த்தனர்.

     பேரரசுவின் அதிரடி பேச்சு

    பேரரசுவின் அதிரடி பேச்சு

    இந்நிலையில் இயக்குநர் பேரரசுவும் விஜய்க்கு எதிராக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதை அனுமதிக்க முடியாது என போர்க்கொடி தூக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பேசிய அவர் கூறியதாவது, " தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது, தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு பீஸ்ட் படம் வெளியான அதே சமயத்தில் தான், கேஜிஎப் 2 படமும் வெளியானது, அந்தப்படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் பீஸ்ட் படத்திற்கு போலவே, கேஜிஎப் படத்தின் 2ஆம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டது.

     நாங்கள் மொழி கடந்து பார்க்கிறோம்..நீங்கள் எங்களை தமிழனாக பார்க்கிறீர்கள்

    நாங்கள் மொழி கடந்து பார்க்கிறோம்..நீங்கள் எங்களை தமிழனாக பார்க்கிறீர்கள்

    இதேபோல தான் பொன்னியின் செல்வன் வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான காந்தாரா திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. நாம்தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும் தான் பார்க்கிறார்கள். வாரிசு படத்தை தயாரித்தவரும் இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க. இப்போது அவர்கள் கொண்டுவந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்துபோக முடியாது. இது மானப்பிரச்சனை.

     சரியான முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும்-பேரரசு

    சரியான முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும்-பேரரசு

    தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும். வாரிசு படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும் உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்" என்று பேரரசு எச்சரித்தார்.

    English summary
    Director Perarasu has accused actor Vijay of being cornered in the matter of the Vaarisu film. He alleged that we love all language films, but others see us only as Tamils. If this continues, there will be a big problem in the film industry. Perarasu has insisted that the Tamil Nadu Producers Association should intervene before that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X