பிக்பாஸ் சீசன் 5 யும் கமலே தொகுத்து வழங்க காரணம் என்ன ?

சென்னை : நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் இருக்கும் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்தடுத்த படங்கள், கட்சி செயல்பாடுகள், தேர்தல் பிரசாரங்கள் என பிஸியாக இருந்தாலும் அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸின் முந்தைய 4 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். அப்பொழுதெல்லாம் ஒரு சமயத்தில் ஒரு படத்தில் தான் நடித்து வந்தார். கட்சி ஆரம்பித்த போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சொல்லிக் கொள்ளும் அளவிலான வெற்றியை பெறவில்லை. கமலின் கட்சியை ரப்பர் ஸ்டாம்ப் கட்சி என்ற ரேஞ்சிலேயே மற்ற கட்சியினர் நினைத்தனர்.

போட்டி கொடுத்த கமல்

போட்டி கொடுத்த கமல்

ஆனால் இந்த சீசனில் நிலைமையே வேறு. சினிமாவை எடுத்துக் கொண்டால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வந்தாலும், மீண்டும் துவங்கப்பட உள்ள இந்தியன் 2 படத்திற்காகவும் கமல் தயாராகி வருகிறார். பாபநாசம் 2 வேலைகள், தேவர்மகன் 2 கதை தயாரிப்பு என பிஸியாக உள்ளார். அரசியல் பக்கத்தை எடுத்துக் கொண்டால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டவர் கமல். தோல்வி அடைந்தாலும், கடும் போட்டி கொடுத்தார் கமல்.

கமலுக்கு பதில் வேறொருவர்

கமலுக்கு பதில் வேறொருவர்

அதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம், உட்கட்சி பிரச்சனை என பலவற்றையும் சமாளித்து வந்தார் கமல். இதனால் பிக்பாஸின் இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார். புதிதாக வேறு யாராவது பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவார் என பேசப்பட்டது. ஆனால் அவற்றை பொய்யாக்கி, இந்த சீசனையும் கமலே தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கமல் தான் காரணமா

கமல் தான் காரணமா

கமல் சினிமாவில் இருந்ததை விட, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கிய பிறகே தமிழக மக்களின் அதிகமானவர்களின் அன்பை பெற்றுள்ளாராம். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதற்கு கமலும் ஒரு காரணமாம். அதிலும் வார இறுதியில் கமல் வரும் எபிசோட்களில் கமல் என்ன சொல்ல போகிறார் என்பதை பார்க்க காத்திருப்பவர்கள் மிக அதிகம்.

சரியான தீர்ப்பு சொல்லும் கமல்

சரியான தீர்ப்பு சொல்லும் கமல்

போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் போதே அவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை தனித்துவமான முறையில் ஏற்படுத்துவது கமலின் ஸ்பெஷல். அதே போல் வீட்டிற்குள் எப்போதெல்லாம் சண்டை சச்சரவுகள் ஏற்கிறதோ, அப்போதெல்லாம் இரு பக்கமும் அரவணைத்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் தீர்த்து வைப்பது கமல் மீதான ஈடுபாட்டை ரசிகர்களிடம் அதிகப்படுத்தி உள்ளதாம்.

ஒரே இந்திய நடிகர்

ஒரே இந்திய நடிகர்

கமல் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். சினிமா உலகில் தொடர்ந்து 62 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே இந்திய நடிகர் கமல் தான். தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நடிகராக, மாணவனாக, நண்பனாக தனது வாழ்க்கையில் கற்ற பாடங்களை, சரியாக நேரத்தில் மிக அழகாக கதையாக சொல்லு அவர்களுக்கு வழிகாட்டி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தனி ஸ்டைலு தான்

தனி ஸ்டைலு தான்

கமலின் டைமிங் கவுன்ட்டர் கொடுப்பது, நகைச்சுவை உணர்வு, எலிமினேட் செய்யப்படுபவர்களை அவர் அறிவிக்கும் விதம், போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் ப்ளஸ்களை சொல்லி, ஊக்கப்படுத்துவதாக பேசுவது ஆகியன தனித்துவமானவை. தனது வாழ்க்கையை மக்கள் மத்தியில் உயர்த்திக் காட்டியது பிக்பாஸ் வீடு தான் என கமலே பலமுறை கூறி இருக்கிறார்.

மக்களின் குரலாய் கமல்

மக்களின் குரலாய் கமல்

சமூகம் சார்ந்த தனது கருத்துக்களை மக்களின் மத்தியில் முன்வைக்க பிக்பாஸ் மேடையை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் கமல். மக்கள் மனதில் கேட்ட நினைக்கும் பல கேள்விகளை சமூகம் அல்லது பிக்பாஸ் போட்டி இரண்டிலும் வெளிப்படுத்தி வருகிறார் கமல். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வயது வித்தியாசமின்றி கவர்ந்துள்ளது. இதனால் கமலுக்கு பதில் வேறு ஒருவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால், அது ரசிகர்களின் எண்ணிக்கை மற்றும் நிகழ்ச்சியின் வெற்றியை பாதிக்கும் என்பதால் இந்த சீசனையும் கமலே தொடர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மிக சிரமப்பட்டு கமலை ஒப்புக் கொள்ள வைத்துள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X