»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னாரு... இதோ இன்னொரு ‘திகில்’ காரணம்!

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னாரு... இதோ இன்னொரு ‘திகில்’ காரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்தாண்டு மட்டுமல்ல இந்தாண்டிலும் தொடர்ந்து விடை தேடப்பட்டு வருகிறது, ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு' என்ற கேள்விக்கு. ஆனால் அடுத்தாண்டு தான் ராஜமௌலி இதற்கு பதில் தருவார் போல.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்த படம் பாகுபலி. காட்சிகளில் பிரம்மாண்டத்தால் மிரட்டி, வசூலில் சாதனை புரிந்தது இப்படம்.

இப்படத்தின் இறுதியில் கட்டப்பா கதாபாத்திரம், பாகுபலியை கொல்வது போல் முடித்திருந்தார் ராஜமௌலி. ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் என்பதன் பதில், இரண்டாம் பாகத்தில் தெரியவரும் என அவர் கூறிவிட்டார்.

why kattappa killed baahubali

தற்போது இரண்டாம் பாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. பாகுபலியின் இந்த இரண்டாம் பாகம் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நம் மக்களுக்கு பொறுமை பத்தவில்லை. ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வி அவர்களது மூளைக்குள் குடைந்து கொண்டே இருக்கிறது. விதவிதமான காரணங்களை அவர்களே கண்டுபிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது இது தொடர்பாக ஜோக் ஒன்று இணையத்தில் வளைய வருகிறது. அதில், முதலாளியும், ஊழியரும் பின்வருமாறு பேசிக் கொள்கின்றனர்.

ஊழியர்: சார் எனக்கு ஒருநாள் லீவு வேணும்

முதலாளி: லீவா... சரி, நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு சரியாகப் பதில் சொன்னால் உனக்கு லீவு தருகிறேன்.

ஊழியர்: ஓகே சார். கேளுங்கள்

முதலாளி: கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?

ஊழியர்: ரொம்ப சிம்பிள் சார். கட்டப்பாவும் என்னை மாதிரியே ஒரு நாள் லீவு கேட்டார். ஆனால், பாகுபலி தரவில்லை. அதனால், அவர் பாகுபலியைக் கொலை செய்து விட்டார்.

முதலாளி ( அதிர்ச்சியுடன்) : நீ ஒரு மாசம் கூட லீவு எடுத்துக்கப்பா...

English summary
A nice joke in connection with Baahubali kattappa issue is doing rounds on facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil