»   »  'நடிகையர் திலகம்' ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

'நடிகையர் திலகம்' ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சாவித்ரி ஜெமினி மாதிரி கீர்த்தி சுரேஷும் துல்கரும்- வீடியோ

சென்னை : நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநதி' என்ற பெயரில் திரைப்படமாக்கி உள்ளனர். நாக் அஷ்வின் இயக்கிவரும் இப்படத்திற்கு தமிழில் 'நடிகையர் திலகம்' எனப் பெயரிட்டுள்ளனர்.

நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். இவர்களோடு சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Why Nadigaiyar thilakam release postpones

'நடிகையர் திலகம்' படத்தை மார்ச் 31-ம் தேதி வெளியிட முன்பு திட்டமிட்டிருந்தனர். ஆனால், நடிகை சமந்தாவும், படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனமும் மே 9-ம் தேதி படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ட்ரைக்கை கருத்தில் கொண்டு இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த பல படங்களின் தயாரிப்பாளர்களும் தற்போது கவலையில் உள்ளனர்.

English summary
Mahanati Nadigaiyar thilakam was scheduled to be released on March 31. However, actress Samantha have officially announced that the film will be released on May 9th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X