»   »  பழி வாங்கப்படுகிறாரா நயன்தாரா?

பழி வாங்கப்படுகிறாரா நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன் தாரா லீட் ரோலில் கலெக்டராக நடித்திருக்கும் அறம் படத்துக்கு சரியான வெளியிட்டாளர் கிடைக்காததால் சிக்கலில் இருக்கிறது என்கிறார்கள். இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்.

வெகுகாலம் கழித்து தமிழில் ஒரு ஹீரோயின் லீட் ரோல்களில் ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். நயன்தாராவுக்கென தனி மார்க்கெட் உருவானது. தனது மார்க்கெட் உயர்வதைக் கண்ட நயனும் தன் சம்பளத்தை சில ஹீரோக்களையெல்லாம் விட அதிகமாக 3 கோடிக்கு மேல் உயர்த்தினார். இப்போது 7 கோடி அளவுக்கு கேட்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் நயன் லீட் ரோலில் நடித்து மாயா என்ற பேய் படம் மட்டும் தான் ஹிட் அடித்தது.


Why Nayanthara's Aram delays?

இனி வெளி தயாரிப்பாளரை லாபம் சம்பாதிக்க விட வேண்டாம் என்று தனது மேனேஜரை பினாமி தயாரிப்பாளராக்கி அவரே தயாரித்த படம்தான் அறம் என்கிறார்கள். விவசாய பிரச்னைகளைப் பற்றி பேசும் இந்த படத்தில் நயன் கலெக்டராக நடிக்கிறார். இந்த படம் தயாரான நேரம் நயன் லீட் ரோலில் நடித்து வெளியான டோரா படம் தோல்வியடைந்தது. அதன் விளைவாக அறம் படம் வெளியாவதில் சிக்கல் என்கிறார்கள். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம்.


இது கிட்டத்தட்ட ஒரு பழிவாங்கல் என்கிறார்கள். நயன்தாரா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும்கூட படத்தின் புரமோஷனுக்காக சிறு துரும்பையும் கிள்ளிக் கூட போடுவதில்லை. எப்போது சிக்குவார் என்று காத்திருந்த திரையுலகத்துக்கு நயன்தாராவின் அறம் படம் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாகத் தான் நயன் தாராவுக்கு உதவ எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்கிறார்கள்.


நயன்தாரா புரமோஷனுக்கு வந்தால் அறம் படத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கலாம். ஆனால் சொந்தப் படத்துக்கு மட்டும் புரமோஷனுக்கு வருவது என்ன நியாயம்? என்று கண்டனக் குரல்கள் எழும்.


என்ன செய்யப்போகிறார் நயன் என்று பார்ப்போம்!

English summary
Why Nayanthara's Aram movie release is delaying? Here is the fact behind the delay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil