twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    NGK: என்ஜிகே தாமதமானதற்கு காரணம் என்ன?... இசை வெளியீட்டு விழாவில் சூர்யா விளக்கம்!

    பல்வேறு காரணங்களால் என்ஜிகே படம் காலதாமதம் ஆனதாக நடிகர் சூர்யா கூறினார்.

    |

    Recommended Video

    Actor Suriya at NGK Meet: என்ஜிகே ஒரு சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது- வீடியோ

    சென்னை: என்ஜிகே படம் காலதாமதம் ஆனதற்கு காரணம் என்ன என்பது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்தார்.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.

    இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

    விழாவில் பேசிய சூர்யா, என்ஜிகே படம் தாமதமானதற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.

     ரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை: அந்த பணம் இருந்தா நீங்க என்ன செய்வீங்க? ரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை: அந்த பணம் இருந்தா நீங்க என்ன செய்வீங்க?

    அரசியலும் யுத்தமும்

    அரசியலும் யுத்தமும்

    "அரசியல் ஒரு ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ஒரு ரத்தம் சிந்தும் அரசியல். என்ஜிகே ஒரு சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது. இதில் செல்வராகவனின் அரசியல் பற்றிய பார்வை இருக்கும். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய படமாக இருக்கும்.

    முதல் சந்திப்பு

    முதல் சந்திப்பு

    செல்வராகவனை நான் முதன் முதலில் சந்தித்தது 2002ம் ஆண்டு. காதல் கொண்டேன் படத்தின் பாடல் காட்சியை பார்ப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. இரவு நேரம் சாரல் மழை பெய்த வேளையில், மின்சாரமும் இல்லாத சமயத்தில் அந்த எடிட்டிங் ரூமுக்கு சென்றேன்.

    நிறைவேறிய ஆசை

    நிறைவேறிய ஆசை

    கரண்ட் வந்தவுடன் பாடலை பார்த்தேன். பின்னர் வெளியே வந்த போது மீண்டும் கரண்ட் போய்விட்டது. அந்த இருளில் பேசிக்கொண்டிருந்தது எனது நினைவில் இன்னும் இருக்கிறது. யோவ் உன் கூட ஒருநாள் படம் பண்ணணும்யா என அப்போது கூறினேன். 17 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நெனவாகியுள்ளது.

    செல்வராகவன் மீதான காதல்

    செல்வராகவன் மீதான காதல்

    செல்வராகவன் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன். மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

    யுவனின் இசை

    யுவனின் இசை

    யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும்.

    காலதாமதம் ஏன்?

    காலதாமதம் ஏன்?

    இந்த படம் காலதாமதம் ஆனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இயக்குனருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மற்ற நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை இந்த படம் அதற்கு தேவையான காலகட்டத்தை எடுத்துக்கொண்டது. காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. என்னுடைய சினிமா வாழ்க்கையில், இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும்", என சூர்யா கூறினார்.

    English summary
    While speaking in the audio launch of NGK, actor Surya explained why the movie got delayed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X