twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு... கமல் தவிர எந்த ஹீரோவும் குரல் எழுப்பலையே?

    By Mayura Akilan
    |

    சென்னை: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்ததைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

    மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் விஜய், மீனவர்கள் தூக்கு பற்றி எந்த வித எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இலங்கை பிரச்சினை, இணையதளத்தில் ஜெ.பற்றி அவதூறு செய்தி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை என எதற்கெடுத்தாலும் குரல் கொடுத்து போராட்டம் நடத்தும் நமது தமிழ் சினிமா ஹீரோக்கள் மீனவர்கள் தூக்கு தண்டனை பிரச்சினைக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் யாழ்பாணத்தை சேர்ந்த மூன்று மீனவர்களையும் சேர்த்து 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    (5 மீனவர்களுக்கு தூக்கு... இலங்கைக்கு கமல் ஹாஸன் கடும் கண்டனம்)

    தொடர் போராட்டம்

    தொடர் போராட்டம்

    இந்தத் தீர்ப்பை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டமும், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களையும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக, 13 தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.

    ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பனிர் குணசேகரன், மீனவப் பிரநிதிகள் ராயப்பன், அருள், சேசு, எம்ரிட், சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், 'இலங்கை உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு அளித்திருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், இலங்கை கடற்படையினரால் கடந்த 5 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், யாழ்பாணம் சிறையில் உள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இந்திய - இலங்கை இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    நடிகர் விஜய் கண்டிக்கலையே

    நடிகர் விஜய் கண்டிக்கலையே

    தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மீனவப் பிரதிநிதிகள், ''ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தை பூர்வீகமாக கொண்டவர் இயக்குநர் சந்திரசேகர். இவர் மீனவ சமுதாயத்தை சார்ந்தவர். சந்திரசேகர், பாடகி ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகனான நடிகர் விஜய் ஜோசப் ஏன் இன்னும் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் விதித்துள்ள தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.

    மற்ற நடிகர்கள் எங்கே?

    மற்ற நடிகர்கள் எங்கே?

    கமல் தவிர யாரும் இந்த பிரச்சினை குரல் கொடுக்கவில்லை. நடிகர் ரஜினி, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட இன்றைக்கு தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களும் சினிமாவில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஹீரோக்கள்தான். அவர்கள் ஏன் மீனவர்களின் தூக்கு தண்டனை பற்றி வாயே திறக்கவில்லை என்பதும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.

    பிரதமருக்கு எச்சரிக்கை

    பிரதமருக்கு எச்சரிக்கை

    பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை அறிவித்து, இலங்கை அரசுக்கு மீனவர்ளின் தூக்குத் தண்டனையை நிறுத்த நெருக்குதல் கொடுக்க தவறினால் நவம்பர் 7-ஆம் தேதி தமிழகம் மீனவப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்தை ராமேசுவரத்தில் கூட்டி, நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்படும் என இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவப் பிரநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    7-வது நாளாக வேலைநிறுத்தம்

    7-வது நாளாக வேலைநிறுத்தம்

    தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் ஏழாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் 30 கோடி ரூபாய்குக்கும் மேல் இதனால் அந்நிய செலவாணி இழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Except Kamal Haasan no Tamil actor has raised his voice in support of 5 TN fishermen who are facing death in Sri Lanka
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X