»   »  வேதாளம் ட்ரைலர் ஏன் வரல தெரியுமா...?

வேதாளம் ட்ரைலர் ஏன் வரல தெரியுமா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடைசியில் ட்ரைலர் இல்லாமலேயே வெளியாகிறது அஜீத்தின் வேதாளம்.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள வேதாளம் படத்துக்கு முதலில் ஒரு டீசர் வெளியிடப்பட்டது. அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் இரு பாடல் டீசர்களும் வெளியிடப்பட்டு பாப்புலராகின.


படம் வெளியாவதற்கு முன்பு ட்ரைலர் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் ட்ரைலரை உருவாக்க முடியவில்லையாம்.


இதுகுறித்து இயக்குநர் சிவா கூறுகையில், "வேதாளம் பட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிய நிறைய நாட்கள் தேவைப்பட்டன.


Why no trailer for Vedalam?

படத்தை தீபாவளிக்கு வெளியிட்டுவிட வேண்டும் என்பதால் இரவு பகலாக போஸ்ட் புரொடக்ஷன் செய்தோம். இதனால் ட்ரைலர் கட் பண்ண நேரம் கிடைக்கவில்லை. ரசிகர்களுக்கு இது புரியும். அவர்கள் நேரடியாக படத்தை என்ஜாய் பண்ணுவார்கள்," என்றார்.

English summary
Ajith's Vedalam movie is releasing Tomorrow without trailer due to lack of time.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil