»   »  “அதென்ன ராதிகா ஆப்தேயின் ஆபாசக் காட்சி?”... கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் ஹுசைன்

“அதென்ன ராதிகா ஆப்தேயின் ஆபாசக் காட்சி?”... கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் ஹுசைன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பார்ச்டு படத்தில் ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் நிர்வாணமாக நடித்திருந்த காட்சியொன்று கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அக்காட்சியில் நடித்த ஹுசைன் கோபமடைந்துள்ளார்.

டோனி, ரத்த சரித்திரம், ஆல் இன் ஆல் அழகுராஜா என முன்னதாக பல தமிழ் படங்களில் நடித்திருந்த போதும், ரஜினி ஜோடியாக கபாலியில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுள்ளார் ராதிகா ஆப்தே.

இந்நிலையில், ராதிகா ஆப்தே பெண் இயக்குநர் லீனா யாதவ் இயக்கியுள்ள பார்ச்டு என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா ஆப்தேவின் ஜோடியாக அசாம் நடிகர் ஹுசைன் நடித்துள்ளார்.

ஆபாசக் காட்சி...

ஆபாசக் காட்சி...

இப்படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆனது. அதில், ராதிகா ஆப்தேவும், ஹுசைனும் ஆடைகள் இல்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இது, ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி' என்ற பெயரில் இணையத்தில் வைரலாக பரவியது.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

இதைக் கேள்விப்பட்டு நடிகர் ஹுசைன் கோபம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "இணையத்தில் இக்காட்சி வெளியானது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆபாசக் காட்சியை மட்டும் லீக் செய்தது மக்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

அழகான காட்சிகள்...

அழகான காட்சிகள்...

இப்படத்தில் அழகான நிறைய காட்சிகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் விட்டு விட்டு ஆபாச காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளனர். அதனை ஏன் லீக் செய்யவில்லை. அப்படியென்றால் செக்ஸ் மீது மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

ஏன் இப்படி தலைப்பு...

ஏன் இப்படி தலைப்பு...

அதோடு, இந்த வீடியோவை லீக் செய்தவர்கள் ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் நானும் தான் நிர்வாணமாக நடித்துள்ளேன். ஆனால் அதனை ஏன் ஹுசைன் ஆபாசக் காட்சி எனக் கூறவில்லை.

ஆணாதிக்க சமூகம்...

ஆணாதிக்க சமூகம்...

காரணம், ஆண்கள் செய்தால் அது தவறல்ல, பெண்கள் செய்தால் மட்டும் தவறா. எப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே உதாரணம். இந்த விஷமத்தைச் செய்தவர் நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்க மாட்டார், ஆணாகத் தான் இருப்பார்" என தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்...

போலீசில் புகார்...

இந்த விவகாரம் தொடர்பாக பட தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆங்கில குறும்படம் ஒன்றில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக தோன்றிய காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Adil Hussain said that the recent leak of certain lovemaking scenes with co-star Radhika Apte from the movie “Parched”, reeks of the patriarchal mindset of our society.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil