twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய கீதத்தை சினிமா தியேட்டர்களில் மட்டும் கட்டாயமாக்கியது ஏன்? - அரவிந்த்சாமி

    By Shankar
    |

    சென்னை: தேசிய கீதத்தை சினிமா அரங்குகளில் மட்டும் கட்டாயமாக்கியது ஏன்? என்று நடிகர் அரவிந்த்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் போடப்பட வேண்டும். மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது இப்போது நடைமுறையிலும் உள்ளது.

    Why not National Anthem not mandatory in Courts, Govt offices?

    இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் தேசிய கீதத்தை மிகுந்த பற்றுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நான் வாய்விட்டே பாடுகிறேன். ஆனால் அதை சினிமா அரங்குகளில் மட்டும் கட்டாயம் என்று சொல்லியிருப்பது ஏன்? அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பாராளுமன்ற, சட்டமன்றங்களில் தினமும் அலுவல் நேரத்துக்கு முன்பாக பாடுவதைக் கட்டாயமாக்கலாமே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதே கேள்விகளுடன் முன்பு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அதைத் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Arvindswamy says, "I will always stand up for our Natl Anthem & sing along,which I do with great pride.Never understood why it ws mandatory n cinema halls only?"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X