»   »  அது ஏன் நடிகர்கள் மட்டும் அடிக்கடி தற்கொலை செய்வதே இல்லை பாஸ்...?

அது ஏன் நடிகர்கள் மட்டும் அடிக்கடி தற்கொலை செய்வதே இல்லை பாஸ்...?

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி நடிகைகள்தான் அதிக அளவில் தற்கொலை செய்கிறார்கள். நடிகர் ஒருவர் காதல் தோல்வியாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ தற்கொலை செய்து கொண்டதாக நியூஸ் அடிச்சே நமது கைகள் பழக்கப்பட்டதில்லை.

நடிகைகள்தான் பெரும்பாலும் தற்கொலை செய்கிறார்கள். அதேசமயம், பிற துறை பிரபலங்களைப் பார்த்தால் அங்கும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது மிக மிக குறைவாகவே உள்ளது.

அரசியலிலும், கிரிக்கெட் போன்ற பிற துறைகளிலும் பெண்கள் தற்கொலை என்பது சற்று குறைவுதான்.

இதுகுறித்த உளவியல் காரணங்களை பிரபல மருத்துவர் டாக்டர் கே.கே.அகர்வால் விளக்குகிறார்.

கிரிக்கெட்டில் இல்லாத மன அழுத்தமா

கிரிக்கெட்டில் இல்லாத மன அழுத்தமா

கிரிக்கெட் வீரர்களுக்கு இல்லாத பதட்டமா, டென்ஷனா.. நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பல வருடங்களுக்கு அணியில் இடமே கிடைக்காதபோது வீரர்கள் சந்திக்கும் உளவியல் அழுத்தங்களை வார்த்தையி்ல் சொல்லி மாள முடியாது.

ஆனாலும் சமாளிப்பது எப்படி

ஆனாலும் சமாளிப்பது எப்படி

ஆனால் அந்த வீரர்கள் எப்படி சமாளித்து மீள்கிறார்கள் என்றால், ஒவ்வொரு அணிக்கும் தனியாக உளவியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். யோகாசன நிபுணர்கள் போன்றோர் உள்ளனர். அவர்கள் வீரர்களை வழிநடத்துகிறார்கள். கவுன்சிலிங் கொடுக்கிறார்கள்.

அரசியலிலும் மர்ம மரணங்கள் இருக்கிறது

அரசியலிலும் மர்ம மரணங்கள் இருக்கிறது

அதேபோல அரசியலிலும் பார்த்தால் மர்மமான மரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்கொலை மிக மிக குறைவுதான், அரிதுதான்.

பர்வீன் பாபி கதை

பர்வீன் பாபி கதை

பாலிவுட்டில் நடிகை பர்வீன் பாபி ஒரு காலத்தில் உச்சத்தி்ல இருந்தவர். பின்னர் காணாமல் போனார். யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

உலுக்கிய தற்கொலைகள்

உலுக்கிய தற்கொலைகள்

கடந்த காலங்களில் இந்தியத் திரையுலகம் பலரை தற்கொலைக்கு காவு கொடுத்துள்ளது. இந்தியில் குருதத், நபீசா ஜோசப், குணால், தமிழில் சில்க் ஸ்மிதா, விஜி, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா என பலரைக் காட்டலாம்.

என்ன காரணம்...

என்ன காரணம்...

தற்கொலைக்குப் பல காரணங்களைக் காட்டலாம். மன உளைச்சல், உடல் நல பாதிப்பு, லைப்ஸ்டைல் மாற்றம், தீராத வியாதி, புற்றுநோய், பார்த்துக் கொள்ள, ஆறுதல் கூற ஆள் இல்லாதது என பல காரணங்கள்.

மதுவால் பாதித்து தற்கொலை செய்த மீனா குமாரி

மதுவால் பாதித்து தற்கொலை செய்த மீனா குமாரி

இந்தி நடிகை மீனா குமாரி, குருதத் போன்றோர் அதிக அளவில் மது அருந்தி உடல்நலம் கெட்டு அதனால் தற்கொலை செய்து கொண்டனர்.

50 வயதுக்குள் நிறையப் பேருக்கு மாரடைப்பு

50 வயதுக்குள் நிறையப் பேருக்கு மாரடைப்பு

50 வயதுக்குள் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவோரில் சினிமாப் பிரபலங்கள்தான் அதிகம். அதேசமயம், அரசியல்வாதிகள் யாருமே 50 வயதுக்குள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதில்லையாம்.

நடிகைகளுக்குத்தான் தொல்லை ஜாஸ்தி

நடிகைகளுக்குத்தான் தொல்லை ஜாஸ்தி

நடிகர்களை விட நடிகைகள் அதிக மன உளைச்சலுக்குள்ளாவதற்குப் பல காரணங்கள் கூறலாம். நடிகர்களை விட நடிகைகளுக்குத்தான் பல்வேறு விதமான நெருக்கடிகள், தொல்லைகள் அதிகம் உள்ளன. அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

ஜொலிக்க வேண்டிய கட்டாயம்

ஜொலிக்க வேண்டிய கட்டாயம்

நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு சினிமா வாழ்க்கை ஆயுள் என்பது மிக மிக குறைவு. அந்த காலகட்டத்தில் அவர்கள் முன்னணியிலேயே இரு்நதாக வேண்டும். போட்டிகள் அதிகம், அதை சமாளிக்க வேண்டும். இப்படி நிறைய.

கவுன்சிலிங் தேவை

கவுன்சிலிங் தேவை

ஒவ்வொரு துறையிலும் இன்று உளவியல் கவுன்சிலிங் தவறாமல் உள்ளது.அதேபோல நடிகைகளுக்கும் கவுன்சிலிங் கட்டாய் தேவை. இதுகுறித்து பலமுறை பேச்சுக்கள் எழும். ஆனால் அதே வேகத்தில் மறந்து விடுகிறார்கள்.

நடிகைகளும் சாதாரணப் பெண்கள்தான். அவர்களுக்கும் மனம் உள்ளது. அந்த மனம் பாதிக்கப்படும்போது, உளவில் ரீதியாக அவர்கள் துவண்டு போகும்போது அதை சரி செய்ய வேண்டியது சக சினிமாக்காரர்களின் கடமை. ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது.

அதுவரை ஏதாவது ஒரு நடிகை எங்காவது தற்கொலை செய்து கொண்டுதான் இருப்பார்....

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Amongst celebrities why do only cine stars commit suicide and not cricketers or politicians?
 The death of Jiah Khan, the film actress, reopens the debate on cine star celebrity deaths. Why do so many suicides occur in the film Industry? Despite similar failure rates, there are no suicides in politics or in cricket.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more