»   »  எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, பீப் பாடலுக்கு மக்கள் முக்கியத்துவம் தரவேண்டுமா?- சுஹாசினி மணிரத்னம்

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, பீப் பாடலுக்கு மக்கள் முக்கியத்துவம் தரவேண்டுமா?- சுஹாசினி மணிரத்னம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, மக்கள் பீப் பாடலுக்கு இந்தளவு முக்கியத்துவம் தர வேண்டுமா? என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சிம்பு, அனிருத் பீப் பாடல் விவகாரத்தில் ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு எதிரான சூழலே நிலவுகிறது.

Why People giving Importance for Beep Song - Suhasini Maniratnam

இந்நிலையில் நடிகை சுஹாசினி" நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கும்போது இப்படி ஒரு பாடலைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டுமா?

வெள்ள நிவாரணப் பணியில் இருக்கலாம், ஏதாவது படிக்கலாம். இல்லையெனில் நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

சமீபத்தில் நமக்காகப் போராடிய 10 பேர் விமான விபத்தில் இறந்து போயிருக்கின்றனர் அதைப் பற்றி பேசலாம். எப்போது பார்த்தாலும் சினிமா, சினிமா என்று சினிமாவிலேயே மக்கள் இருக்க வேண்டாமே". என்று பீப் பாடல் விவகாரத்தில் சுஹாசினி கருத்து தெரிவித்திருக்கிறார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் சூர்யா நகரை சுஹாசினி- மணிரத்னம் தம்பதியர் சமீபத்தில் தத்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Beep Song Controversy: Suhasini Maniratnam says in Recent Interview "Why People giving more Importance for One Song with so many other Problems?.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil