»   »  பிரேமம் ஒரு சோம்பேறித்தனமான படம்.. விருது பெறத் தகுதியில்லை.. விருதுக் குழு அதிரடி விளக்கம்!

பிரேமம் ஒரு சோம்பேறித்தனமான படம்.. விருது பெறத் தகுதியில்லை.. விருதுக் குழு அதிரடி விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள அரசின் விருது பெரும் தகுதியை பிரேமம் ஏன் இழந்தது? என நடுவர் குழு தலைவர் மோகன் விளக்கமளித்திருக்கிறார்.

கடந்த செவ்வாயன்று கேரளா அரசின் மாநில திரைப்பட விருதுகள் பட்டியல் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது.

இந்த விருது வரிசையில் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான பிரேமம் இடம்பெறவில்லை. இது மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேமம்

பிரேமம்

கடந்த ஆண்டு நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் பிரேமம். வெறும் 4 கோடி செலவில் வெளியான இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து 60 கோடிகளைக் குவித்தது.அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது.

கேரள திரைப்பட விருதுகள்

கேரள திரைப்பட விருதுகள்

கடந்த செவ்வாயன்று கேரளா அரசின் மாநில திரைப்பட விருதுகள் பட்டியல் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது. இந்த விருது வரிசையில் பிரேமம் இடம்பெறவில்லை. இது மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் இப்படம் நன்றாக ஓடியதால் மலையாள ரசிகர்களுடன் தமிழக ரசிகர்களும் இணைந்து சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

பிரேமம் ஏன் ஒரு பிரிவில் கூட விருது பெறவில்லை என்பதற்கான காரணத்தை நடுவர் குழுவின் தலைவர்களில் ஒருவரான மோகன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் "நிச்சயமாக பிரேமம் ஒரு நல்ல பொழுபோக்கு படம்தான். ஆனால் மாநில அரசின் விருதுகள் என்று வரும்போது ஒருசில அளவுகோல்கள் இருக்கின்றன.

தரத்திற்கு

தரத்திற்கு

பிரேமம் கேரள அரசின் திரைப்பட விருதுகள் என்கிற தரத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. இதற்கு அல்போன்ஸ் புத்திரனுக்கு படம் எடுக்கத் தெரியாது என்று அர்த்தமல்ல. அவர் தமிழ், மலையாளம் என்று 2 மொழிகளிலும் நேரம் படத்தை நன்றாக இயக்கியிருந்தார்.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

ஆனால் பிரேமம் படத்தை அல்போன்ஸ் சோம்பேறித்தனத்துடன் இயக்கியுள்ளார். மற்ற படங்களை ஒப்பிடும்போது பிரேமம் ஒரு வலிமையான போட்டியாளராக இல்லை. அதனால் தான் பிரேமம் ஒரு பிரிவில் கூட விருதை வெல்லவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

English summary
Why Premam Movie Loss Kerala State Film Award, now the Reason is Revealed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil