Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லெஜண்ட் அண்ணாச்சி மேல் என்ன கோபம்..கடுமையாக விமர்சித்த ராதாரவி
சென்னை: தமிழக சினிமா வரலாற்றில் வியாபார நிறுவனத்தில் விளம்பரப்படத்தை எடுத்து அதன் மூலம் சினிமா கதாநாயகனாக 55 வயதுக்கு மேல் நடித்தது யாரும் கிடையாது.
லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு அந்த பெருமை உண்டு. அவர் நிறுவன விளம்பரங்கள் மூலம் நடிகைகளை வைத்து அவரே நடித்தார்.
அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அவர் சொந்தமாக படம் எடுத்து கதாநாயகனாகவும் நடித்துள்ளதை ராதாரவி மறைமுகமாக கிண்டலடித்தார்.
Recommended Video
கமல் மட்டும் தான் கொடுப்பாரா...நாங்களும் கொடுப்போம்...அசத்திய ஆர்ஜே பாலாஜி

தமிழ் திரையுலகின் கதாநாயகர்கள்
தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் வந்துள்ளனர். 19 வயதில் நடிக்க வந்த எம்ஜிஆர் 40 வயதுக்கு மேல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து முடிசூடா மன்னராக இருந்தார். பல நடிகர்கள் நடிக்க வந்து சாதித்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டை உடைத்தவர் ரஜினிகாந்த். பின்னர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர் தடம் பதித்தனர்.

பாரதிராஜாவிடம் நடிகர் திலகம் சிவாஜி கேட்ட கேள்வி
அதன் பின்னர் பாரதிராஜா கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தார். இதுகுறித்து பாரதிராஜா ஒருதடை மேடையில் சொன்னார். சிவாஜி என்னிடம் கேட்டார் சினிமாக்கு எதற்கு வந்தாய் என்று, கதாநாயகனாக நடிக்க என்றேன், ஏன் உன் வீட்டில் கண்ணாடியே இல்லையா என சிவாஜி கேட்டார் என்று பாரதிராஜா சொன்னார். பாரதிராஜா நடிக்காததால் மிகச்சிறந்த இயக்குநர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தார்.

சினிமா கதாநாயகன் இலக்கணம்
சினிமா கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற நியதியெல்லாம் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க வந்தபோதே உடைந்து விட்டது என்பார்கள் அதன் பின்னர் பல நடிகர்கள் அதை உடைத்துள்ளனர். இன்று கதாநாயகனுக்குரிய பர்சனாலிட்டி இருப்பவர்கள் எல்லாம் அமெரிக்க மாப்பிள்ளை ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தொடரும் உருவக்கேலிக்கு அண்ணாச்சியும் தப்பவில்லை
ஆனால் உருவக்க்கேலி இன்றும் தொடரத்தான் செய்கிறது. நேற்றைய படவிழாவில் பேசிய நடிகர் ராதாரவி தனது பேச்சில், "ஒருத்தரைச் சொன்னேன் இப்ப டான்ஸ் ஆடுகிறார், படம் எடுத்துடுவார்னு சொன்னேன் இப்ப படம் எடுத்துட்டார். எனக்கு தெரியும் அது. நான் பேரையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. அவர் சொன்னாராம் ஒரே படத்தோடு போதும்னு சொல்லிட்டாராம். அது நடக்காது மேக்கப் போட்டார் இல்ல முடிஞ்சுப்போச்சு அவர் கதை.

அண்ணாச்சி சரவணனை கடுமையாக விமர்சித்த ராதாரவி
திருப்பி உன்னை ரோட்டுக்குக்கு கொண்டு வந்து விட்டாத்தான் சரிப்படும். அதுவரை நடிக்க விட மாட்டானுங்க. ஏன்னா பாக்கிறவர்களை கொடுமை படுத்துற இல்ல அந்த சாபம் உன்னை சும்மா விடாதுல்ல. அதை யோசிக்க வேணாம், ஒரு நாலு பேர வாழ வைக்கிற மாதிரி படம் எடுத்து சோற்றைப்போட வேண்டியதுதானே. நாளைக்கு இவரை எதிர்த்து ராதா ரவி பேசுறாருன்னு போடுவாங்க. பழைய படத்தில் ஒரு வசனம் வரும் ஏண்டா உன் முகத்தை பார்த்திருக்கியா என்கிற வசனம் வரும்.

சினிமாவுக்கும் கண்டவன் காரும் நுழைகிறது
அதுபோல சிலர் இருக்கிறார்கள். முன்னர் கோடம்பாக்கம் பாலம் கட்டும் முன் சின்ன ரயில்வே கேட் இருக்கும். அப்ப எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி சாவித்ரி என பலரது கார் நிற்கும். கதவு திறந்தவுடன் பார்த்து பார்த்து விடுவானுங்க. இப்ப பாலம் கட்டினவுடன் எல்லா கார்களும் சர்ரு சர்ருன்னு போகுது. எல்லோரும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினியாகி விட முடியாது" என பேசினார்.

ராதாரவியின் சர்ச்சைப்பேச்சு
லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி படத்தில் நடிப்பதை மரைமுகமாக ராதாரவி கிண்டலடித்து பேசியது பலரையும் நெளிய வைத்தது. பின்னர் பேசிய அவர் படத்தயாரிப்பாளர் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசியதை கிண்டலடித்து நான் படிச்சதே கான்வெண்ட் தான் என பேசினார்.